அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் மரணம் : திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!!


வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் (71) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (25-07-11) இரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள சாய் மகால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும், அரசியல்புள்ளிகளும் ரவிச்சந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை ரவிச்சந்திரன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

டைரக்டர் ஸ்ரீதரால் காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன். நான், குமரிப்பெண், அதே கண்கள், மூன்றெழுத்து, பாக்தாத்பேரழகி, அன்றுகண்ட முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் ஆடுபுலி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். திருச்சியை சேர்ந்த அவர், சினிமா மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் டைரக்டர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். 1965ம் ஆண்டு காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் டைரக்டர் ஸ்ரீதர். அத்துடன் தனது சொந்த படநிறுவனமான சித்ராலாயாவுக்காக 2 வருடத்திற்கு ரவிச்சந்திரனை மாதம் ரூ.500 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார். முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்றாலும், வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதருக்காக தொடர்ந்து 2 ஆண்டுகள் சித்ராலயா நிறுவனத்துக்காக நடித்துக் கொடுத்தார்.

அதன் பின்னர் சித்ராலாயா நிறுவனத்தில் இருந்து விலகி மற்ற கம்பெனி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். படிப்படியாக உயர்ந்து வெள்ளிவிழா கதாநாயகனானார். நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
 
ஒரு காலகட்டத்தில் ஆண்டுக்கு பத்து படங்கள் வரை நடித்த ரவிச்சந்திரனுக்கு, அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்ததால் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்தார். தமிழைத் தவிர மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ரவிச்சந்திரனின் படங்களில் இடம்பெறும் அனைத்தும் ஹிட் ஆகிவிடுவதால் ரசிகர்களிடையே பிரபலமாக காணப்பட்டார். 

ஹீரோ வாய்ப்புகள் குறைந்த பிறகு, சிறிது காலம் நடிப்பு துறையிலிருந்து விலகியிருந்த ரவிச்சந்திரன் ஆபாவாணனின், ஊமை விழிகள் மூலம் மீண்டும் நடிகரானார். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தார். 

ரவிச்சந்திரன், மானசீக காதல், மந்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தங்கம் விலை பவுன் ரூ.75 ஆக இருந்த காலத்திலேயே மாதச்சம்பளமாக ரூ.1000 பெற்றவர் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிக படங்களில் நடித்திருக்கும் அவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இணையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னணி நாயகனாக வலம்வந்த நடிகர் ரவிச்சந்திரன் வாய்ப்புகள் இல்லாத காலத்தில், வாய்ப்புக்காக யாரிடமும் போய் நின்றதில்லை. விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் அருகில் இருக்கும் அவருடைய நிலத்தில் அமைதியாக விவசாயம் செய்து கொண்டிருந்தார் என்பது கூடுதல் தகவல.

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த ரவிச்சந்திரனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயிலாப்பூரில் உள்ள தேவகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிச்சந்திரனுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிசிச்சை அளித்து வந்தனர். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஒருகட்டத்தில் கோமா நிலைக்கு சென்ற அவர், நேற்று இரவு மரணம் அடைந்தார். 

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவரதன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் அம்சவரதன் சில படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். \


thanks dinamalar newspaper

ஆள் பார்த்து உதவுங்கஒரு சொறிநாயை ஓநாய் கொல்ல வந்தது. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக தியானத்தில் இருந்த முனிவரைச் சரணடைந்து தன் நிலையைச் சொன்னது. முனிவர் அதன் மேல் கமண்டல தீர்த்தத்தைத் தெளித்து ஓநாயாக்கி விட்டார். பலசாலியான அதுதன்னைக் கொல்ல வந்த ஓநாயை விரட்டி விட்டது.

ஓநாயைக் கொல்ல ஒரு சிறுத்தை வந்தது. உடனேஓநாய் முனிவரைச் சரணடைய அவர் தீர்த்தம் தெளித்து சிறுத்தையாக மாற்றி விட்டார்.

சிறுத்தையை பார்த்த சிறுத்தை "இது நமது இனமாயிற்றேஎன விட்டுச் சென்றுவிட்டது. சிறுத்தையைக் கொல்ல ஒரு யானை வந்தது.
சிறுத்தை வழக்கம் போல் முனிவரைச் சரணடைய அவர் அதை யானையாக்கி விட்டார். யானையைக் கொல்ல புலி வந்தது. யானை முனிவரிடம் ஓட அதை புலியாக்கி விட்டார்.

புலியைக் கொல்ல சிங்கம் வந்தது. புலியை சிங்கமாக்கி விட்டார் முனிவர். சிங்கநிலைக்கு உயர்ந்த சொறிநாய்க்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.

""
இனி நாம் சிங்கமாகவே இருக்க வேண்டும். ஒருவேளைஇந்த முனிவர் நம்மை மீண்டும் நாயாக்கி விட்டால்நாம் படாதபாடு படவேண்டியிருக்கும்.

எனவேஇவரைக் கொன்று விட வேண்டியது தான்,'' என்றெண்ணி பின்னால் நின்று பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட முனிவர் தண்ணீரைத் தெளித்து ""போ நாயே!'' என விரட்டஅது மீண்டும் சொறிநாயாகி அழுதுகொண்டே சென்றது.

உதவி செய்வது முக்கியம். ஆனால்அதையும் தகுதியானவர்களுக்கு தான் செய்ய வேண்டும்... புரிகிறதா!

இதைப்போய் வீணாக்கலாமா?ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தேடி ஒரு இளைஞன் வந்தான். அப்போதுஅவர் ஆஸ்ரமத்தில் இல்லை. அருகிலுள்ள நதிக்கரைக்கு தியானத்துக்காக சென்றுவிட்டார்.

பரபரப்புடன் வந்த இளைஞன்அங்கிருந்த சீடரிடம்,""ஐயா! என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. குருதேவர் இங்கு இல்லை.


நீங்களாவது அதைக் காப்பாற்ற வழி சொல்லுங்கள்,'' என்றான்.


சீடர் அவனிடம்,""ஒரு காகிதத்தில் மூன்றுமுறை "ராமஎன்று எழுது. அதைச் சிறிது தண்ணீரில் நனைத்துஅந்த நீரை குழந்தைக்குப் புகட்டு. சரியாகி விடும்,'' என்றார்.

இளைஞன் சென்று விட்டான். மறுநாள்அவன் ஆஸ்ரமத்திற்கு மகிழ்ச்சியுடன் வந்தான். ராமகிருஷ்ணர் அங்கே இருந்தார். முந்தைய நாள் நடந்த விஷயத்தைச் சொல்லிதங்கள் சீடரின் அறிவுரைப்படி மூன்றுமுறை ராமநாமம் எழுதிய காகிதத்தை நீரில் நனைத்துஅந்த நீரை குழந்தைக்குப் புகட்டியதையும்குழந்தை உயிர் தப்பியதையும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


ராமகிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. சீடனை அழைத்தார்.


""முட்டாளே! ராமநாமத்தின் மகிமை உனக்கு தெரியாதா! ஒரு குழந்தையை உயிர் பிழைக்க வைக்கும் சின்ன விஷயத்துக்கா மூன்றுமுறை ராமநாமம் எழுதச் சொன்னாய். ஒரு தடவை எழுதினால் போதாதா! ராமநாமத்தின் மகிமை தெரியாத நீ ஆஸ்ரமத்தை விட்டு போய்விடு''என்று கடிந்து கொண்டார்.

சீடர் அவரது பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ராமகிருஷ்ணரும் அவரை மன்னித்தார். ராமநாமத்தின் உயர்வுக்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!


thanks for friend 

சிறுத்தையின் தாக்குதல்---- இது எப்படி இருக்கு

வனவிலங்கு துறையினர் ஊருக்குள் புகுந்த ஒரு சிறுத்தையை சுட்டு வீழ்த்தினர்.......
அந்த சிறுத்தை ஆறு பேரை தாக்கியது ......... அதனால் சுட்டு வீழ்த்தப்பட்டது........
சம்பவம் நடந்த இடம் ---  வெஸ்ட் பெங்கால --- கடந்த புதன்


ஒருவர் மீது தாக்க வருகிறது..............பயந்து போய் ஒருவர் கம்பத்தில் ஏறுகிறார்....


ஒரு வீரரை கடிக்கிறது .........கடைசியாக சுட படுகிறது......
எவ்வளவோ முயற்சி செய்து  சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடியவில்லை .......

மச்ச பலன்

ஆண்கள் .

நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி, சுயநலவாதி, கஞ்சன், கருணை இல்லாதவன்.

புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி, நல்ல மனைவி, நல்ல குழந்தை.

காதில் மச்சம் இருந்தால் நல்ல மதிப்பு, புகழ் விருத்தி, சாதனையாளர்,

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி. உயர்வு.

உதட்டில் மச்சம் இருந்தால் கலைத்துவம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம். பலர் பாராட்டு.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

இரு கன்னத்தில் மச்சம் இருந்தால் நபண பிரச்சனை இல்லை, செல்வந்தர்.

கழுத்தில் மச்சம் இருந்தால் நல்ல சகோதரன் மற்றும் விசுவாசி உண்டு.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, பெண்கள் மூலம் தாம்பத்ய சுகம், மகிழ்ச்சி.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை, சந்ததி விருத்தி. சிறந்த சமயல்காரர்.

ஆண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போகவான், பெண்கள் கூட்டம் தேடிவரும், பெண்கள் மூலம் உதவி உண்டு.

வலது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குடும்பத்தின் மூலம் உதவி, உத்யோகதில் உள்ள மனைவி.

இடது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குழந்தை மூலம் செலவு, அவஸ்தை.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் ஆக்கபூர்வமான வெற்றியாளர்.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் மனைவி, பெண்களால் தொல்லை.

பாதத்தில் மச்சம் இருந்தால் கடின ஊழைப்பாளி. ஆச்சர அனுஸ்டானம் உள்ளவவன்.

பாதத்தின் அடியில் மச்சம் இருந்தால் கஸ்டம் நஸ்டம், குற்றம் குறை. ஏற்றம் இல்லை.வலது கையில் மூட்டுக்கு மேல் மச்சம் இருந்தால் சிறந்த போர் வீரன்.
கட்டை விரலில் ஒரு மச்சம் இருந்தால் சிறந்த எழுத்தாளர்.


உள்ளங்கையில் தொழில் ரேகைக்கு பக்கத்தில் மச்சம் இருந்தால்
தொழிலில் ஏற்றம், இற்க்கம் இருக்கும்.கண்ணில் மச்சம் இருந்தால் திருமணத்திற்கு பின் மனைவி மூலம் யோகம் வரும்.......


********************************************************************************************************************


பெண்கள்


நெற்றியில் மச்சம் இருந்தால் கீர்த்தி.

புருவத்தில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

காதில் மச்சம் இருந்தால் ஆண் வாரிசு உண்டு.

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி.
.
உதட்டில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம்.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.கழுத்தில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.

பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.

பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.

வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.

இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.

பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.


கடி ஜோக்ஸ்..
 


சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்.,! -- ஹி ஹிமக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா. பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் "அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.," என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது.  இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது, சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே. சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன். எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான்.

தற்போது நான் ஒரு தலைக்காதல் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் ஒரு அழகான காதல் கதை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன். விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 


thanks dinamalar newspaper 

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG