அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

ரஜினிக்கு அம்மாவாக நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்! -மீனா

I am ready to act as Rajinis mother - Meena
திருமணத்துக்குப்பிறகு தம்பிக்கோட்டை என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் மீனா. ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதனால் அதன்பிறகு யாரும் அவர் பக்கம் திரும்பவில்லை. அதற்காக மனசுடைந்து போகவில்லை மீனா. அவர் பார்க்காத சினிமாவா. தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக கல்லெறிந்தபடியே சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக பொழுதை கழித்து வந்தார்.

இப்படியிருந்த நேரம்தான் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு மீனாவை தேடி வந்தது. மம்மூட்டிக்கு அம்மா என்றால், கதைப்படி ப்ளாஷ்பேக்கில் மம்மூட்டி குழந்தையாக இருக்கிறபோது அம்மாவாக நடிக்கிறாராம் மீனா. ஆனால், இநத செய்தி தற்போது மலையாள பட உலகில் மீனாவுக்கு பரபரப்பான என்ட்ரியாக அமைந்திருக்கிறது.

அதனால், அடுத்தடுத்து மலையாளத்தில் புதிய படங்களை கைப்பற்றும் நோக்கத்தில் கதை கேட்டு வரும் மீனா, தமிழையும் விடவில்லை. சில அபிமானத்திற்குரிய இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி அவர் சான்ஸ் கேட்க சென்ற இடத்தில் ஒரு இயக்குனர், மீனா எனக்கே அம்மாவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ரஜினி ஒரு மேடையில் சொன்னாரே என்பதை நினைவுகூர்ந்தாராம்.

அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்த மீனா, அப்படியொரு வாய்ப்பு வந்தாலும் கண்டிப்பாக நடிப்பேன். ரஜினி சாருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன்பிறகு கதாநாயகியாக நடித்தேன். இப்போது அம்மா வேடம் வந்தாலும் நடிப்பேன். என்னைப்பொறுத்தவரை ரஜினி சாருக்கு அம்மாவாக நடிக்க நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் பெருமையாக சொன்னாராம் மீனா.
 
thanks dinamalar

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG