அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

சிங்கம் சிங்களாத்தான் வரும்


இது தேவையா அட போங்கய்யா 


                                                      ஐயோ சிக்கிகிட்டோம் 

அன்னா ஹசாரேவும் நாற்பது திருடர்களும்


சொன்ன பேச்சை கேக்கணும் 

வேலாயுதம் பற்றி விஜய் பேட்டி!!
ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளை(28.08.11) மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் "வேலாயுதம்" படம் பற்றியும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்களுக்கு விஜய் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது,  நான் ரொம்ப நாளாக எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிற படம் "வேலாயுதம்". இப்படத்தை ரசிகர்களை கொண்டுதான் ஆரம்பித்தோம். அதுபோல் ஆடியோ ரிலீசையும் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த விரும்பினோம். அதற்காக நானும் தயாரிப்பாளர், டைரக்டர் ராஜா எல்லாரும் யோசித்தோம். ரசிகர்கள் மத்தியில் என்கிறபோது சரியான இடம் தேவை. எனக்கு எல்லாமே ரசிகர்களாகிய நீங்கள் தான். என் எல்லா காரியங்களிலும் நீங்கள் தான் கூட இருக்க வேண்டும். உங்கள் முன்னாடி தான் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் நடக்க வேண்டும். அப்படி யோசித்த போதுதான் வேலாயுதம் ஆடியோவை மதுரையில் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். நாளை 28ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த படத்தைபற்றி கேட்டால், எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி எனக்கும் ஆசை இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமும் இந்தபடத்தில் இருக்கு.படத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும். வேலாயுதம் படத்தின் கதை பற்றி ராஜா சொல்ல வந்தபோது, படத்தின் கதைகேட்டு மிகவும் பிடித்து போனது. மேலும் படத்தில் அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால், உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். படமும் ரொம்ப அழகாக வந்திருக்கிறது.

படத்தில் முக்கியமான விஷயம் ரயில் சண்டைக்காட்சி. இப்படிபட்ட சண்டைக்காட்சியில் நடிக்க ரொம்ப நாளா ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும். இந்த ரயில் சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து சண்டைக்காட்சியை படமாக்கினோம். அதுஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அடுத்தது படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பற்றி சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனியை பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே தெரியும். அதேபோல் வேலாயுதமும், வேட்டைக்காரனை காட்டிலும் பலமடங்கு வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா...? படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும், எல்லாவற்றிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை ஏதாவது இருக்கும். அதுதான் நீண்டகாலம் நிலைக்கும் என்கிற எண்ணம் அவருக்கு உண்டு.

ரசிகர்களிடம் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.

மொத்தத்தில் "வேலாயுதம்" படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.


thanks for dinamalar news paper

சிந்தியுங்களேன்!


இன்று நம் வீட்டிலும்நாட்டிலும் குறைந்து வரும் ஒரு நற்குணம் ஒற்றுமை. மொத்த மக்கள் தொகையில்கூட்டுக்குடும்பம் என 10 சதவீதம் இருந்தால் கூட அது அதிகம் தான்.
பழைய கதை ஒன்று...ஆனாலும்பசுமையாய் நினைவில் நிற்கும் கதை. 

ஒரு வீட்டில்நான்கு சகோதரர்கள் இருந்தனர். தந்தையோ பெரும் பணக்காரர். பிள்ளைகள் சொத்துக்காக அடித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக ஆளுக்கொரு வீட்டிற்கு குடிபோய் விட்டனர்.
பெரியவருக்கு பெரும் வருத்தம். தான் <உயிருடன் இருக்கும்போதே இப்படி என்றால்தன் காலத்துக்குப் பிறகுஇன்னும் நிலை மோசமாகி விடுமே என கவலைப்பட்டார்.
ஒருநாள்பிள்ளைகளை அழைத்தார். அவர் முன்னால்ஒரு விறகுக்கட்டு கிடந்தது.

மூத்தவனை அழைத்து,""இந்த விறகு கட்டை ஒடி,'' என்றார். கட்டாக இருந்ததால்அதை அவனால் ஒடிக்க முடியவில்லை. தன்னால் முடியவில்லை என கீழே போட்டு விட்டான்.

அடுத்த இரண்டு சகோதரர்களையும் இதே போல செய்யச் சொன்னார். அவர்களாலும் அந்தக் கட்டை ஒடிக்க முடியவில்லை.
கடைசி மகனை அழைத்தார். அந்தக் கட்டில் ஒரு விறகை மட்டும் எடுத்து ஒடிக்கச் சொன்னார். சடக்கென  ஒடிந்தது.
""பார்த்தீர்களா! விறகு கட்டாக இருந்த போதுஅதை ஒடிக்க முடியவில்லை. தனியே பிரித்ததும் எளிதாக ஒடிந்து விட்டது. நீங்களும் ஒற்றுமையாக இருந்தால்இந்த ஊரில் உங்கள் செல்வாக்கை அழிக்க யாராலும் முடியாது. பிரிந்திருந்தால்ஆளுக்கொன்றாக சொல்லிக் கொடுத்துஉங்களிடையே பகையைப் பெரிதுபடுத்திஇருக்கிற பணத்தையெல்லாம் அழிக்கும் வழியைச் செய்து விடுவார்கள். எனவேநீங்கள் ஒற்றுமையாய் இருக்கும் 
வழியைப் பாருங்கள்,'' என்றார்.


அந்த சகோதரர்கள் மீண்டும் ஒன்றுபட்டனர். தங்கள் பிள்ளைகளுக்கும் ஒற்றுமையாய் வாழ்வதன் அவசியத்தை  கற்பித்தனர். அந்தக் குடும்பம் வாழையடி வாழையாய் தழைத்தது.


இன்று வீடுகளில் சகோதரசகோதரிகளே ஒன்றோ இரண்டோ தான்...அவர்களும் பிரிந்து கிடந்தால்... சிந்தியுங்களேன்!

சிந்தனை செய் மனமேதிருப்தி அடையாதவன் ஒருவரையும் திருப்தி செய்யமாட்டான். எவன் எப்பொழுதும் சந்தோஷத்துடனும்திருப்தியுடனும் இருக்கிறானோஅவனே அனைவரையும் சந்தோஷத்துடன் இருக்கச் செய்வான்.
நாக்கு பாவமான வார்த்தைகளைப் பேசுவதற்கு தயாராக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவது அவசியம்.சோம்பல் அனைத்து விபரீதங்களுக்கும் மூலகாரணமாகிறது. "சோம்பேறிஎன்ற சொல்லே அபத்தமானது. அப்படி ஒரு பெயரை வாங்கிவிடவே கூடாது. எப்பாடுபட்டாவது அதனை விட்டுவிட வேண்டும்.
உலகம் என்பது தர்மஅதர்மச் செயல்களுக்கான தேர்வு நடக்கும் இடம். மிகுந்த கவனத்துடன் தர்மஅதர்மங்களைப் பரிசீலனை செய்துநல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
கெட்டவர்களின் சகவாசம் நரகம். சாதுக்களின் சகவாசம் சொர்க்கம்.
சாஸ்திரங்களைப் படித்து அதன் ரகசியங்களை அறிந்தும்அதைக் கடைபிடிக்காதவன் பாவம் செய்தவனை விட கீழானவனாகிறான். எனவேசாஸ்திரங்களின் கூறியபடி அதனை முறையாக கடைப்பிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் செய்யும் அனைத்து செயல்களும் முழுமைபெற செயல்களின் ஆதாரத்தில் தர்மம் இருக்க வேண்டும்.
எப்போதும்எவரையும் துன்புறுத்த கூடாதுநல்லெண்ணத்துடனும்கெட்ட எண்ணத்துடனும் ஒரு பிராணியை கொடுமைப்படுத்த கூடாது.
கூரையில்லாத வீட்டில் மழை தாரைகள் விழுவது போல யோசனையில்லாத மனிதனின் மனதில் விரோதிகள் புகுந்து விடுவார்கள்என்பதால் அனைத்து செயல்கள் செய்வதற்கு முன்பாக யோசனையுடன் செய்வது நல்லது.
எதிரி கூட அதிக தீங்கு விளைவிப்பதில்லைஆனால் கெட்ட வழியில் செல்லும் மனமோ அதைக் காட்டிலும் அதிக நஷ்டத்தை விளைவிக்கும் என்பதால் மனதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
வண்டு எப்படி பூக்களின் அழகையும்வாசனையையும் சேதப்படுத்தாமல் மதுவை எடுக்கிறதோஅதுபோல் பாவத்தில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
போரில் லட்சக்கணக்கான மனிதர்களை ஜெயிப்பவன்உண்மையில் வீரனல்ல. எவனொருவன் தன்னைத் தானே ஜெயிக்கிறானோஅவன் தான் உண்மையான வீரனாவான்.
பிறருக்கு உபதேசம் செய்பவன்அந்த உபதேசங்களுக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான் பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துவது என்பது கடினமான செயல்.
உலகம் நீர்க்குமிழி மற்றும் கானல் நீர் போன்றதுஇந்த உலகை துச்சமாக மதிப்பவனை இறப்பு தொடுவதில்லை. அதாவதுஅவன் இறப்பை எதிர்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கிறான்.
வாழ்க்கையில் பெரிய கஷ்டங்கள் ஏற்படும் போதுகோபத்தை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையான சாரதியாவான். மற்றவர்கள் அனைவரும் கயிற்றைப் பிடிப்பவர்கள் தான்.
அன்பின் மூலம் கோபத்தையும்நல்ல செயல்கள் மூலம் தீய செயல்களையும்,பொதுநலத்தால் சுயநலத்தையும்உண்மை மூலம் பொய்யையும்வெற்றிகொள்ள வேண்டும்.
வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது.  எவன் அதிகமாகப் பேசுகிறானோ அவன் அதிகம் பொய் பேசுகிறான். வார்த்தைகளை எவ்வளவு குறைக்கமுடியுமோஅவ்வளவு குறைத்துப் பேச வேண்டும்.


நன்றி


என் மானம் போச்சு... ரூ.1 கோடி கொடுங்க : ரீமாசென் மிரட்டல்!!கவர்ச்சியான போஸ்டரால் என் மானமே போச்சு; ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க என்று நடிகை ரீமாசென், பிரபல தயாரிப்பாளரை மிரட்டியிருக்கிறார். கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளியான சினிமா விளம்பரம் ஒன்றில் நடிகை ரீமாசென் தனது முழு முதுகும் தெரியும்படி படுத்திருப்பார். இது ரீமா நடித்த பெங்காலி படத்தின் டப்பிங் படத்தில் இடம்பெறும் காட்சி. அதேநேரம் இந்த படம் அந்த மாதிரி படமல்ல, அற்புதமான ஆர்ட் பிலிம் என்கிறார்கள் விவரமறிந்த சினிமா பார்ட்டிகள்.

இதற்கிடையில் ரீமாசென்னின் க்ளாமர் படத்தை போட்டு விளம்பரம் செய்யும் தகவல் ரீமாவின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இதனால் கடுப்பாகிப் போன ரீமா, எரிச்சலும் புகைச்சலுமாக சம்பந்தப்பட்ட டப்பிங் பட தயாரிப்பாளருக்கே போன் அடித்துவிட்டார். உடனே விளம்பரத்தை நிறுத்தலைன்னா உங்க மேல ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரிக்க, அதிர்ந்து போனாராம் இங்குள்ள தயாரிப்பாளர். அவசரம் அவசரமாக அடிக்கப்பட்ட போஸ்டர்களையெல்லாம் திரும்ப பெற்றிருக்கிறார்கள். உலக அழகி ஐஸ்வர்யா நடித்த இன்னொரு பெங்காலி படத்தையும்,
க்ஸ் பட ரேஞ்சுக்கு விளம்பரம் செய்து கோடிகளை சம்பாதித்தாராம் இந்த தயாரிப்பாளர். ப்படிதா
tfrom dinamalar news paper செ

வந்தே மாதரம்--சுதந்திர தின நினைவுகள்:-

தாய் மண்ணை வணக்கம் 

வந்தே மாதரம்................... வந்தே மாதரம்.................
Vandemataram


சுதந்திர தின நினைவுகள்:-

Valentines Day, new yearfriendship day .
 Every1 celebrates n msgs b4 10 days regarding that,
 But independence day there is no advance 
msg from anyone, let us celebrate the 
independence day at least from now 
PROUD TO BE AN இந்தியன்
Aug. 15, 1947: Mountbatten swears Nehru in as Prime Minister of India 

TRAIN TO PAKISTAN; India 1947. Trains packed with refugees - Hindus and Sikhs headed for India, and Muslims headed for Pakistan - were convenient targets for gangs of killers on both sides of the border. Inadequately protected 'Refugee Specials' were typically stopped, and the occupants butchered, several times in the course of the journey. 
1971: Indira Gandhi reviews the troops, in the context of militaryand diplomatic preparations for the Bangladesh War. Ghandhiji Addressing people 


1948: The news of Gandhi's assassination hits the streets. A stunned crowd gathers in Calcutta. 


1948: Crowds in New Delhi wait for a glimpse of Gandhi's funeral procession. 
A Library being divided at the time of partition. Heart trembles to see this sight and it is tough to imagine the state of the nation at the moment when people needed to hold hands. 


Nehru and Gandhi at AICC meeting, July 1946 


The dead - Punjab, 1947

சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!
ன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.
பைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக வாழவும் வழி காட்டுகிறார் ஆற்காட்டை சேர்ந்த சித்த மருத்துவர் மகேஷ்வரன். கூடவே, 'பக்குவமாய் செய்ய ஏது நேரம்?’ என்பவர்கள் பூண்டு, வெங்காயம், வெள்ளரிக்காயை பச்சையாக பயன்படுத்தினாலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு கரைந்துவிடும்’ என்கிறார்.
பூண்டு

'பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில்  கெட்ட கொழுப்பு  கணிசமாக குறைந்துவிடும்.
ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை
பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.
கொள்ளு
ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.
 
மிளகு
வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும்.  உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
சாம்பார் வெங்காயம்
சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
கோடாம்புளி
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக  பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகம் - அதிமதுரம்
தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.  அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருடன்      20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.
செம்பருத்தி,ரோஜா இதழ்கள்  
செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து        50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி - ஏலக்காய்
இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!

தீர்ப்பு சொல்ல தகுதியானவன்


நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும்திறமையும் மட்டும் போதுமா! இன்னும் சில தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி.

உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா.

இவரது காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி தீர்ப்பளிப்பார். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும்அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25 தேவதை பொம்மைகளால் சுமக்கப்படும் ஒரு பளிங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

விக்கிரமாதித்தனின் காலம் முடிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்ததும்அவரது அரண்மனைசிம்மாசனம் உள்ளிட்டவை மண்ணில் புதைந்து போனது. அந்த இடம் ஒரு காலத்தில் மேய்ச்சல் நிலமானது. அதில் சிறுவர்கள் ஆடுகளை மேயவிடுவார்கள்.

அவர்கள் பொழுது போக்குக்காக ஏதாவது விளையாடுவது வழக்கம். ஒருநாள் மேடான இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்தான்.


மற்றவர்களிடம், ""நான் தான் நீதிபதி. நீங்கள் ஏதாவது குற்றம் செய்தவர்கள் போல் நடித்து வாருங்கள். நான் தீர்ப்பளிக்கிறேன்,'' என்றான். சக சிறுவர்களும் ஏதோ குற்றம் செய்தது போல்,நீதிபதியிடம் முறையிடநீதிபதி சிறுவன் அருமையாக தீர்ப்பு சொன்னான். 

அவனது வார்த்தைகள் ஆடு மேய்ப்பவனுக்கு உரியதைப் போல் இல்லை. ஆணித்தரமாக நடுநிலையோடு இருந்தது.

இதுபற்றிஊர்மக்கள் கேள்விப்பட்டனர். தங்கள் சொந்த வழக்குகளை அந்த மேட்டில் அமர்ந்திருந்த சிறுவனிடம் கொண்டு வந்தனர்.


சிறுவனும் மிக நியாயமான தீர்ப்பளிக்கவே வழக்குகள் தேங்குமளவுக்கு கூட்டம் அதிகரித்தது. இந்த தகவல் அவ்வூர் மன்னரை எட்டியது. அவர் இதுபற்றி மந்திரிகளிடம் கேட்கவே,""மகாராஜா! படிப்பறிவில்லாத ஆடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திருக்கும் மேடான இடத்தில்விக்கிரமாதித்த மகாராஜா அமர்ந்திருந்த சிம்மாசனம் புதைந்திருக்குமோ என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
தோண்டிப்பார்க்கலாமா!'' என்றனர்.

ராஜா சம்மதிக்கவேஅவ்விடத்தைத் தோண்டினர். எதிர்பார்த்தபடி சிம்மாசனம் கிடைத்தது. அதை அரண்மனைக்கு கொண்டு வந்தனர்.

மன்னர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து வழக்கை விசாரிக்க ஆசைப்பட்டு அருகில் சென்றார்.

அப்போதுசிம்மாசனத்தை தாங்கிய ஒரு தேவதை,"" ஏ மன்னா! நீ பல நாடுகளை அபகரித்தவன்,அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுபவன் இதில் அமர தகுதியில்லை என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது.

மன்னன் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் அமரப்போனான்.

மற்றொரு தேவதை,""நீ அடுத்தவர் நாட்டை மட்டுமல்லஉன் மக்களுக்கு செலவழிக்க வேண்டிய செல்வத்தையே ஊழல் செய்து கவர்ந்தவன். உனக்கு இதில் இருக்க தகுதியில்லை,''என சொல்லி விட்டு மறைந்தது.

இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தேவதையும் அவனது கெட்ட குணங்களை சொல்லி மறைந்து விட்டன. ஒரே ஒரு தேவதை மட்டுமே எஞ்சியிருந்தது. ""எல்லா தீய குணங்களையும்"நான்விட்டுவிடுகிறேன்.


இனியாவது "எனக்குஅமரும் தகுதி உண்டா?'' என அவன் கேட்கவே,

""நான், "எனக்குஎன்ற வார்த்தைகளை அழுத்தமாக அகங்காரத்துடன்  உச்சரித்த நீ இதில் அமர முடியாது,'' என சொல்லி மறைந்து விட்டது.

ஆசைகோபம்விருப்புவெறுப்பு இவற்றை எவனொருவன் விடுகிறானோ அவனே தீர்ப்பு சொல்ல தகுதியானவன்.

ஆடு மேய்க்கும் சிறுவனிடம் இவை அத்தனையும் இருந்தன. அதனால்அவன் சரியான தீர்ப்பு சொன்னான். மன்னனுக்கு அத்தகைய தகுதிகள் இல்லாததால்அவனால் தீர்ப்பு சொல்ல இயலவில்லை.

நீதி வழங்கும் ஸ்தானத்தில் உள்ளவர்கள் இந்தக் கதையை மனதில் கொள்ள வேண்டும்.
நன்றி

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG