அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

எந்திரன் சூப்பர் மெகா ஹிட்!9/30/2010 2:44:39 PM
இந்திய திரையுலகம் இதுவரை காணாத வெற்றியை எந்திரன் பெறும் என்பது, துபாயில் இன்று காலை வெளியான எந்திரன் முதல் காட்சி(7.30 மணிக்கு) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினி ரோபோ கெட்டப்பில் அசத்தியுள்ளார். இனி இந்தியாவில் எந்திரன் படம் போல் வருமா என்பது சந்தேகம் தான் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் எந்திரன் நாளை ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் ரிலீஸாவது போலவே அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டமாக ரிலீஸாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ‘எந்திரன்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்டியானாபொலீஸில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் தொடர்ந்து இரு தினங்களுக்கு எந்திரன் திரையிடப்படுகிறது. இந்தி மற்றும் தெலுங்குப் பதிப்புகளும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசாகின்றன.


நன்றி தினகரன் நாளிதழ்

2030 வரை திமுக ஆட்சி -தமிழ் வரலாறு

யாரும் மனதையும் புண்படுத்த அல்ல - நகைச்சுவையை

சவுக்கு
 2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?
இப்படித்தான்.

தமிழ்
முதலில் கடவுள் வாழ்த்து

மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி 

அடுத்து மொழி வரலாறு.
தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது.    20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர்.   அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார்.    திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
 கணிதம்.
 புவியியல்
உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,
கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.
 தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.
 வரலாறு
தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர். 2ஜி அலைக்கற்றை என்ற நாட்டை தனது தளபதி ராசாவோடு சேர்ந்து வெற்றிகரமாக கபளீகரம் செய்தவர். பட்டத்து இளவரசியாக அறிவிக்கப் பட்டிருந்தாலும்,  இவரால் கடைசி வரை தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை.கருணாநிதியின் மருமகன்களான பெரிய மாறன், சிறிய மாறன் ஆகிய இருவரும் பதவிக்கு வர போட்டி போட்டாலும் கூட அவர்களால் தலைமைப் பதவியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அரசின் பிரச்சாரத் துறையை கைப்பற்றி இறுதி வரை செல்வாக்கு செலுத்தினர். இவர்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டியால், இளவரசன் அஞ்சா நெஞ்சன் போட்டியாக தொடங்கிய பிரச்சாரத் துறை பிரபலமடையாமல் போனது.
திருக்குவளை சாம்ராஜ்யத்திற்கு கடும் சவாலாக விளங்கியவர் ராணி ஜெயா. இந்த ராணியின் கடுமையான சவாலை கருணாநிதி திறம்பட எதிர் கொண்டு, ராணியின் படைத் தளபதிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி, ராணியை நிலை குலையச் செய்தார்.
திருக்குவளை அரசப் பரம்பரையைச் சேர்ந்தவராக இல்லாவிடினும், திருக்குவளை சாம்ராஜ்யத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவர், இளவரசி குஷ்பூ. இவரை உருவகப் படுத்தித் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இறுதி காலத்தில் மன்னரின் நம்பிக்கையை பெற்ற இவர், மற்ற வாரிசுகளை பின்னுக்குத் தள்ளி, அரச பதவியை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

அயோத்தி வழக்கு: 30ல் தீர்ப்பு

அலகாபாத்: அயோத்தி வழக்கில் 30ந் தேதி தீர்ப்பு கூறுகிறது அலகாபாத் நீதிமன்றம். அயோத்தி தீர்ப்பிற்கு தடை கோரும் மனுவை தடை செய்தது உச்சநீதிமன்றம். அயோத்தி வழக்கில் 24ந் தேதி தீர்ப்பு கூறவிருந்தது அலகாபாத் நீதிமன்றம். திரிபாதியின் பொதுநல மனுவை ஏற்று விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது-.

அயோத்தி பிரச்னை:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே வழக்கு. 60 ஆண்டாக நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பை அறிய நாடு முழுவதும் ஆர்வம் காணப்படுகிறது. ராமர் பிறந்த இடம் என்பதால் தங்களுக்கு சொந்தம் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். பாபர் மசூதி இருந்ததால் தங்களுக்கு சொந்தம் என்று மற்றொரு பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலம் குறித்து நடைபெற்ற பல கட்ட பேச்சுத் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கருத்து:

அயோத்தி வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் வரவேற்பளித்துள்ளது. இதனையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை நீக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.
தேங்க்ஸ் --- தினகரன்

தேசத் துரோகிகள்

இயற்கையின் சீற்றத்தாலோ,அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?
 
தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.
 
முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ  70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்  262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.
 
 961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.
 
பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.
 
விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.
ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.
 
 அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?
 
 விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.
வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.
 
 70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.
எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்
கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    
இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

அரை மனிதன் கண்டிப்பா பாருங்கோ

இவர் பெயர் : கென்னி ஈஸ்டேர்டாய் சிறு வயதில் ஏற்பட்ட (sacral அகேநேசிஸ்) அரிதான நோயய்னால்
இவர் தன் பாதி உடம்பு இழந்தார் ......

அயோத்தி சர்‌ச்ச‌ை நாளை தீர்ப்பு இல்லை:


அயோத்தி இட விவகாரத்தில் நாளை  தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்புக்கு சுப்ரீ‌ம் கோர்ட் ( இன்று 23 ம் தேதி மதியம் ) இடைக்கால தடை விதித்தது. ஒரு வார காலம் தடை இருக்கும், இது தொடர்பான விசாரணை மீண்டும் வரும் 28 ம் தேதி நடக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கும் நோட்டீஸ் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாளை ( வெள்ளிக்கிழமை ) தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் வன்முறையோ, அசம்பாவித சம்பவங்களோ  நடைபெறாமல் தடுக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுக்க எல்லா மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மாநில அரசுகளும், போலீசாரைக் குவித்து  முழு கவனத்தில் உள்ளன.   மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், தீர்ப்பு வரும் நாளன்று மக்கள் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

தடை கோரி மனுத்தாக்கல் செய்தவர்: ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் இந்த தீர்ப்புக்கு தடை வழங்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 17 ம் தேதி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது., தீர்ப்பு வெளியாகும் நாளில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். ரமேஷ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க கோர்ட் மறுத்து விட்டது. மேலும் மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ரமேஷ்திரிபாதி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவாக தடை கோரி அப்பீல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.

சூப்பர் போட்டோ டோன்ட் மிஸ் இட்

 
 
Black & White TwinsPres. Bush Fishing in HurricaneWorld's Biggest Dog


Largest Cat


Fishermen with Giant Catfish


Dog Meets Porcupine


North Pole Sunset


Space Nebula Resembles Human Eye


Satellite Photo: Space Shuttle Tragedy


Montana Forest FireShark Attacks HelicopterCloud Formation Resembles 'Hands of God'?


Home Computer of the Future as Envisioned in 1954


Tsunami Strikes Phuket, Thailand

தமிழ் குடிமகன் ஆகுங்க

நடிகர் விக்ரம் - சசிக்குமார் புகைச்சல்!

சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது சினிமா உலகில் புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதும், மோதிக் கொள்வதும், பொது இடங்களில் கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம். இதற்கு ஷாரூக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம். “நாயை” உதாரணம் காட்டிக்கூட இருவரும் குடும்பிடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலம் காலமாக நட்சத்திரங்கள் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். - சிவாஜியில் தொடங்கி, விஜய் - அஜித் வரைக்கும் முன்னணி நாயகர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிலும் இப்போதைய இளம் நாயகர்களான தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி,  ஆர்யா, சிபி, சாந்தனு, பிரசன்னா, நரேன், ஸ்ரீ்காந்த், பரத், விஷ்ணு, அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் ஒருவரது பட விழாவில் மற்றவர் கலந்து கொண்டு வாழ்த்தும் அளவுக்கு நட்புடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருவேறு பிரிவுகளாக வேறுபட்டு அடித்துக் கொண்டாலும் நடிகர்கள் தங்களுக்கும் பகையை வளர்த்துக் கொண்டதில்லை. கைகோர்த்துக் கொள்வதும் இந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வ சாதாரணம். இதற்கு ஷாரூக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம். “நாயை” உதாரணம் காட்டிக்கூட இருவரும் குடும்பிடிச்சண்டை போட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை காலம் காலமாக நட்சத்திரங்கள் நண்பர்களாகவே பழகி வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். - சிவாஜியில் தொடங்கி, விஜய் - அஜித் வரைக்கும் முன்னணி நாயகர்கள் நட்பு பாராட்டி வருகிறார்கள். அதிலும் இப்போதைய இளம் நாயகர்களான தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி,  ஆர்யா, சிபி, சாந்தனு, பிரசன்னா, நரேன், ஸ்ரீ்காந்த், பரத், விஷ்ணு, அஜ்மல் உள்ளிட்ட நடிகர்கள் ஒருவரது பட விழாவில் மற்றவர் கலந்து கொண்டு வாழ்த்தும் அளவுக்கு நட்புடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் இருவேறு பிரிவுகளாக வேறுபட்டு அடித்துக் கொண்டாலும் நடிகர்கள் தங்களுக்கும் பகையை வளர்த்துக் கொண்டதில்லை.

ஆனால் சமீப நாட்களாக  தமிழ் திரையுலகில் இரு உச்ச நட்சத்திரங்கள் தங்களுக்கிடையில் புகைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமல்ல. தேசிய விருது நாயகன் விக்ரமும், தற்போது தன் படத்திற்காக தேசியவிருது பெற்ற தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரும்தான். பிரச்சனைக்கான காரணத்தை தேடினால் படத்தயாரிப்பு விவகாரத்தைத்தான் சொல்கிறார்கள். சசிகுமார் தற்போது இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தினை ஆரம்பத்தில் விக்ரம், சசிகுமார் இருவரும் இணைந்துதான் தயாரித்தார்கள். பாதிப்படம் எடுக்கப்பட்ட நிலையில் ஏனோ விக்ரம் படத் தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகிக்கொண்டார். ஆனாலும் மனம் தளராத சசிக்குமார் தனது சொந்த பட நிறுவனம் சார்பில் அந்த படத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் இப்படி சொல்லாமல், கொள்ளாமல் திடீரென தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகிக் கொண்டது அழகா? என்ற ரீதியில்தான் இருவருக்குமிடையில் புகைச்சல் ஆரம்பமாகியிருக்கிறது.

எந்திரன் பார்க்கலாம் வாங்க


இது எப்புடி இருக்கு

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

Blog Archive

My Blog List

TAMIL MP3 SONG