அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

இதைப்போய் வீணாக்கலாமா?ஒருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தேடி ஒரு இளைஞன் வந்தான். அப்போதுஅவர் ஆஸ்ரமத்தில் இல்லை. அருகிலுள்ள நதிக்கரைக்கு தியானத்துக்காக சென்றுவிட்டார்.

பரபரப்புடன் வந்த இளைஞன்அங்கிருந்த சீடரிடம்,""ஐயா! என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. குருதேவர் இங்கு இல்லை.


நீங்களாவது அதைக் காப்பாற்ற வழி சொல்லுங்கள்,'' என்றான்.


சீடர் அவனிடம்,""ஒரு காகிதத்தில் மூன்றுமுறை "ராமஎன்று எழுது. அதைச் சிறிது தண்ணீரில் நனைத்துஅந்த நீரை குழந்தைக்குப் புகட்டு. சரியாகி விடும்,'' என்றார்.

இளைஞன் சென்று விட்டான். மறுநாள்அவன் ஆஸ்ரமத்திற்கு மகிழ்ச்சியுடன் வந்தான். ராமகிருஷ்ணர் அங்கே இருந்தார். முந்தைய நாள் நடந்த விஷயத்தைச் சொல்லிதங்கள் சீடரின் அறிவுரைப்படி மூன்றுமுறை ராமநாமம் எழுதிய காகிதத்தை நீரில் நனைத்துஅந்த நீரை குழந்தைக்குப் புகட்டியதையும்குழந்தை உயிர் தப்பியதையும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


ராமகிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. சீடனை அழைத்தார்.


""முட்டாளே! ராமநாமத்தின் மகிமை உனக்கு தெரியாதா! ஒரு குழந்தையை உயிர் பிழைக்க வைக்கும் சின்ன விஷயத்துக்கா மூன்றுமுறை ராமநாமம் எழுதச் சொன்னாய். ஒரு தடவை எழுதினால் போதாதா! ராமநாமத்தின் மகிமை தெரியாத நீ ஆஸ்ரமத்தை விட்டு போய்விடு''என்று கடிந்து கொண்டார்.

சீடர் அவரது பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ராமகிருஷ்ணரும் அவரை மன்னித்தார். ராமநாமத்தின் உயர்வுக்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!


thanks for friend 

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG