அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!

பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, January 19, 2011, 14:40
மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களேஎன்று தான்.
இதில் நாமும் விதிவிலக்கல்ல..
ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.
பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!
விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு இத்தன கோடி நஷ்டம்என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.
நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்
BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணைநிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.
நஷ்டம் என்று அரசு கூறுவதுவர வேண்டிய லாபத்தை என்றுசில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.
லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.
பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டுஅதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்றுஎன்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு  பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?
எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது
அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.
ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.
2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.
இது மிகப்பெரும் அநியாயமாகும்.
2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே  பெட்ரோலை லிட்டர்  54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.
எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்
உண்மையில்  தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.
ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.
இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011
வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..
மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.
இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!
இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!
மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.
நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு ?.
இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!
100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.
ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு  வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.
இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.
எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதலாக வரி விதிக்க காரணம்
1. தனியார் நிறுவனங்கள்
சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.
கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.
ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.
இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.
Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின்  லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.
இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.
தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.
இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.
முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.
2. வட்டி
65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.
இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.


எனது நண்பன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியது

தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!

எனது நண்பன் எனக்கு அனுப்பிய இ-மெயில்
மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி இது என்று வாய் கூசாமல் புளுகிக் கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலச் சேவைகள் இதோ இன்றைக்கும் தொடர்ந்திருக்கிறது.

இதுவரையிலும் 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையிலும் இந்தியா இன்றைக்கும் அமைதிப் புறாவாக "ஏன் ராசா என் மக்களை கொல்றீங்க?" என்று புலம்பலை மட்டும் செய்து கொண்டிருக்கிறது..!


இந்தியா முழுமைக்குமே இப்படியா? என்று கேட்காதீர்கள். இது தமிழர்களுக்கு மட்டும்தான்.. ஒரு பஞ்சாபியனுக்கோ, வங்காளனுக்கோ, மராத்தியருக்கோ இந்தக் கதி நடந்திருந்தால் இந்தியாவே கொந்தளித்தது போன்ற காட்சிகள் அரங்கேறியிருக்கும். கேவலம் ஒரு தமிழன்தானே.. தமிழ்நாடுதானே என்ற அவல நிலை இன்றைக்கு நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது..!

இதற்குக் காரணம் 'கொடுக்க' வேண்டியதைக் கொடுத்தால் தமிழக ஆட்சியாளர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர்களுடைய மக்களை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள். நாம் கஷ்டப்படத் தேவையில்லை என்பதை மத்திய ஆளும் கட்சியினரும் கண்டறிந்து வைத்துள்ளனர்.

எச்சில் இலைக்காக நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருக்கும் நாய்களைப் போல மாநில அரசின் ஆளுநர்கள், தங்களது குடும்பச் சுகத்திற்காக மத்தியில் ஆளுகின்ற அரசுகளிடம் தமிழ்நாட்டை அடகு வைத்து வெகுநாட்களாகிவிட்டது..

இப்போதும் அடுத்து ஆட்சிக்கு வருவதுதான் தனது குடும்பத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து மத்திய அரசு என்ன சொல்கிறதோ.. எப்படி நடக்கச் சொல்கிறதோ அப்படியே நடந்து கொண்டு பதவியைப் பிடித்துக் கொள்ள நாடகமாடி வருகிறார் தமிழக முதல்வர்..!

மாதத்திற்கு இரண்டு தமிழ் மீனவர்களாவது சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை அரசுக்கு கடிதம் எழுதுவோம்.. எழுதிவிட்டோம். பிரதமரும் பதில் கடிதம் போட்டுவிட்டார்.. இனி அதுபோல் நடக்காது என்று பழைய கீறல் விழுந்த ரிக்கார்டையே திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார் முதல்வர்.

மத்தியில் இருக்கின்ற ஆட்சியிலும் ஒரு தமிழர்தான் பிரதான மந்திரியாக இருந்து வருகிறார். 'சின்னப் பயல் சிதம்பரம்' என்ற இந்த மாடி வீட்டு மேதாவியின் கைக்கங்கரியத்தால் இவருடைய உற்றமும், சுற்றும் மட்டும் மீண்டும் மெகா கோடீஸ்வரர்களான நிலையில் உள்துறையை செப்பனிட்டு பாதுகாக்க சவுத் பிளாக்கிற்கு அனுப்பப்பட்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் நாடு இன்னும் பல அல்லல்களுக்குள் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது. இருபது மைல் தொலைவில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் செத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தமிழர்தான் இந்தியாவுக்கே உள்துறை அமைச்சர் என்பது தமிழர்கள் வரலாற்றில் மறக்க முடியாத, அதே சமயம் கசப்பான உண்மை.

இவர் தமிழரே இல்லை என்பது மட்டுமல்ல... மனிதரே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கி, தமிழ் ஈழத்து மக்களைக் கொலை செய்ய ஆயுதங்களையும் கொடுத்து உதவியிருக்கிறார்.. இந்த மனிதரிடம் போய் நடவடிக்கை எடு என்றால் எப்படி எடுப்பார்...?

இன்னும் பத்து, நூறு மீனவர்கள் செத்தால்கூட இந்த மாடி வீட்டு மேதைகள் படியிறங்கி வர மாட்டார்கள். பேசாமல் இன்றைக்கு அவரது வீட்டுக்கு புடவை, ஜாக்கெட், வளையல் சகிதமாக வந்திருந்த சீர்வரிசையை பிறந்த வீட்டுச் சீதனமாகப் பெற்றுக் கொண்டாவது தனது பெருமையை இவர் பறை சாற்றிக் கொள்ளலாம்.

பாண்டியன், ஜெயக்குமார் என்ற இரண்டு மீனவர்களும் அடுத்தடுத்த 10 நாட்கள் இடைவெளிக்குள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் துயரமான சம்பவங்கள். கடல் எல்லையைத் தாண்டாதீர்கள் என்று அரசு சொல்லுமேயானால், கடல் எல்லையாத் தாண்டாமல் செல்ல அந்த எல்லையில் இவர்கள் நின்றிருக்க வேண்டுமே..? அல்லது அதுதான் எல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் என்ன பாதுகாப்பு வசதிகளை அங்கே செய்து வைத்திருக்கிறார்கள்.


மிதக்கும் மிதவைகளைப் போட்டு வைத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் மிக வசதியாக அன்றாடம் கடலோரக் காவல்படை சென்று வரும் மிகக் குறுகிய இடங்களில் மட்டுமே அடையாளத்திற்காக வைத்துள்ளது கடற்படை.

மீனவர்கள் மீன்கள் எங்கு இருக்குமோ அங்குதான் மீன் பிடிக்கப் போவார்களே ஒழிய.. மிதவைகள் எங்கே இருக்கின்றன என்று தேடிப் பார்த்து அவற்றின் அருகே வந்து மீன்களைப் பிடிக்க முயல்வதி்ல்லை. இந்த ஒரு சிறிய அறிவார்ந்த பிரச்சினையைக்கூட அணுகத் தெரியாத அளவுக்கு கடற்படையும், தமிழக அரசும், மத்திய அரசும் இருக்கிறது என்றால் இவர்களெல்லாம் எதற்காக இங்கே இருக்கிறார்கள் என்றுதான் கேள்வி கேட்க வேண்டும்..!

அப்படியே எல்லை தாண்டிப் போனாலும்கூட நமது நாட்டு தொழில் நுட்பத்தையும், பண உதவியையும், விலை மதிக்க முடியாத ஆயுத உதவியையும் பெற்று வைத்திருக்கும் அந்த நாடு நமது நாட்டு மீனவர்களுக்கு உரிய மரியாதையை தந்திருக்க வேண்டுமே..?

துப்பாக்கிச் சூடும், நிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதும், கழுத்தில் கயிற்றைக் கட்டி கொலை செய்வதும்தான் அந்த நாடு செய்யும் நன்றிக் கடனா..? இப்படியொரு நாட்டிற்கு மத்திய அரசு ஏன் மீண்டும், மீண்டும் நிதியுதவி செய்கிறது..?

நன்றி கெட்ட நாட்டை சொற்களால் திருத்த வழியில்லையெனில், பலத்தைக் காட்டலாமே..? பலத்தைக் காட்டத் துப்பில்லையெனில் எதற்காக இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்..? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?

ஒரு மரணம் நமது வீட்டில் நிகழ்ந்திருக்கிறது என்றால், அதனை முறைப்படி தெரிவித்து ஆகக்கூடிய நிவாரணப் பணிகளையும் தெரிவிப்பதுதான் ஜனநாயக அரசின் கடமை. இப்போது இப்படியா நடக்கிறது..?

கொலையா..? மீனவர்களா..? போராட்டமா..? சேலை வழங்குகிறார்களா..? எங்க..? என்று ஆளும் கட்சிக்குச் சொந்தமான டிவியில் வலைவீசி தேடும் அளவுக்கு செய்திகளைச் சுருக்குகிறார்கள்.

எந்தவிதத்திலும் கொலைச் சம்பவம் மக்கள் மத்தியில் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.


எழவெடுத்த தற்போதைய முதல்வர், சுடுகாட்டில் பொணத்துக்குக் கொள்ளி வைக்கக் கற்பூரத்தைக்கூட நான்தான் வாங்கிக் கொடுத்தேன் என்று சொல்வார் போலிருக்கிறது.. கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்குக் கொடுத்த நிதியுதவி செய்தி பேப்பரில் கூட வெட்கமில்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறார். என்ன எழவுடா இது? இவர்களுக்கு மானம், ரோஷமெல்லாம் கிடையவே கிடையாதா..?

செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி செத்த வீட்டிலும் விளம்பரம் தேடிக் கொள்ள இவர்களுக்கு எப்படித்தான் மனம் வருகிறது..!

இந்த லட்சணத்தில் மக்கள் மனதை திசை திருப்ப வேண்டி இந்திய நாட்டுச் செய்திகளையே பிரதானமாகச் சொல்லிவிட்டு கடைசியில் போனால் போகிறதென்று தமிழகத்துச் செய்தியில் மீனவர் கொல்லப்பட்டது பற்றிச் சொல்லி முடிக்கிறார்கள் தொலைக்காட்சி உறவினர்கள்..! அவரவர்க்கு அவரவர் சம்பாத்தியம் முக்கியமாக இருக்கிறது.. ஆனால் இவர்களையெல்லாம் ஆட்சிக்குத் தேர்வு செய்த நாம்தான் இதற்காக வெட்கப்பட வேண்டும்..!

மக்கள் மத்தியில் கசப்புணர்வு என்றவுடன் தாத்தா உடனடியாக ஓய்வு என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துவிட்டார். இதைச் சொன்னவுடன் தமிழர்கள் அனைவரும் பொங்கி வந்து கண்ணீர் விட்டுக் கதறியழுது இவரைத் திரும்ப அழைப்பார்கள் என்று நம்புகிறார்.. அப்படியே இந்தத் துரோகி, ஒரேயடியாகப் போனால்கூட இங்கே எவருக்கும் கவலையில்லை என்பதை இந்த நேரத்தில் வருத்தத்துடன் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது..!

ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு ஆளை பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தையே பலி கொடுக்கலாம் என்பதை காந்தியாரே ஒப்புக் கொண்டிருக்கிறார்..!

இன்றைய நிலையில் உலகம் தழுவிய தமிழர்கள் மனதில் பலி கொடுக்க வேண்டிய தனி நபர் பட்டியலில் கருணாநிதியும், குடும்பப் பட்டியலில் அவருடைய குடும்பத்தினரும்தான் இருக்கிறார்கள்..!

இவர்கள் தொலைந்தால்தான் உண்மையாகவே தமிழர்களுக்கு விடிவுகாலம்..!

 


--
நன்றி  மெர்லின் அபு.

பிரபலமானவர்களின் விசித்திர புகை படம் - ரசிக்க!!!!
ரசிக்க!!
சிரிக்க ரசிக்க

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG