அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

ஆன்-லைன் மூலம் வேலையா? உஷார் நண்பர்களே!

ஆன்-லைன் மூலம் வேலை வழங்கும் போலி நிறுவனங்களிடம் ஏமாறாமல் இருப்பது பற்றி கூறுகிறார் வாஸ்கான் நிறுவன சீனியர் பிரவீன்: "நீங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் கை தேர்ந்தவர்களா? வீட்டில் இருந்த படியே 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க விருப்பமா? உடனே இந்த லிங்கை கிளிக் செய்யுங்க, உங்கள் கிரெடிட் கார்டு நம்பரை பதிவு செய்யுங்க' என்று நீங்கள் அணுகும் இணையதள முகவரியில் கேட்டால், உடனே உஷார் ஆகி விடுங்கள். வேலை கொடுக்கும் முன், எந்த ஒரு நிறுவனத்திலிருந்தும் முன் பணம் கேட்க மாட்டார்கள். இணையத்தில் பிரபல நிறுவனங்கள் பெயருடன் வேலைக்கு, 1,000 பேர் தேவை என்று ஏகப்பட்ட விளம்பரங்கள் வரும். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்... பிரபல நிறுவனங்களுக்கு வேலை தேடும் யாருமே ஆன்-லைனில் விளம்பரம் செய்ய மாட்டார்கள். நானும் வேலை தேடுகிறேன் என்ற பேரில், அத்தனை இணைய முகவரிகளிலும் நமது விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால், உங்களது தகவல்கள் அந்த ஏமாற்று நிறுவனங்களுக்கு சென்று விடும். அந்நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக உங்களது விண்ணப்பங்களில் இருந்தே, உங்கள் மொபைல் நம்பர்களை எடுக்கின்றனர். இது அவர்களுக்கு சாதகமாக பயன்படுகிறது. பொதுவாக எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென, பிரத்யேகமாக ஒரு இணையதளம் வைத்திருப்பர். அதன் மூலம் மட்டுமே, விண்ணப்பிக்கவும். ஆன்-லைன் மூலம் வேலை தேடுவது அதிகரித்து வரும் இக்கால சூழலில், வேலை தருவதாக கூறி பல போலி நிறுவனங்கள் தங்கள் இணைய முகவரிகளை இணையத்தில் உலாவ விட்டிருக்கின்றனர். இது குறித்து, எச்சரிக்கையாக இருந்தால் தேவையற்ற ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.


Thanks dinamalar Newpape

0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG