கவர்ச்சியான போஸ்டரால் என் மானமே போச்சு; ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுங்க என்று நடிகை ரீமாசென், பிரபல தயாரிப்பாளரை மிரட்டியிருக்கிறார். கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளியான சினிமா விளம்பரம் ஒன்றில் நடிகை ரீமாசென் தனது முழு முதுகும் தெரியும்படி படுத்திருப்பார். இது ரீமா நடித்த பெங்காலி படத்தின் டப்பிங் படத்தில் இடம்பெறும் காட்சி. அதேநேரம் இந்த படம் அந்த மாதிரி படமல்ல, அற்புதமான ஆர்ட் பிலிம் என்கிறார்கள் விவரமறிந்த சினிமா பார்ட்டிகள்.
இதற்கிடையில் ரீமாசென்னின் க்ளாமர் படத்தை போட்டு விளம்பரம் செய்யும் தகவல் ரீமாவின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. இதனால் கடுப்பாகிப் போன ரீமா, எரிச்சலும் புகைச்சலுமாக சம்பந்தப்பட்ட டப்பிங் பட தயாரிப்பாளருக்கே போன் அடித்துவிட்டார். உடனே விளம்பரத்தை நிறுத்தலைன்னா உங்க மேல ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று எச்சரிக்க, அதிர்ந்து போனாராம் இங்குள்ள தயாரிப்பாளர். அவசரம் அவசரமாக அடிக்கப்பட்ட போஸ்டர்களையெல்லாம் திரும்ப பெற்றிருக்கிறார்கள். உலக அழகி ஐஸ்வர்யா நடித்த இன்னொரு பெங்காலி படத்தையும், இக்ஸ் பட ரேஞ்சுக்கு விளம்பரம் செய்து கோடிகளை சம்பாதித்தாராம் இந்த தயாரிப்பாளர். ப்படிதா
tfrom dinamalar news paper செ
0 comments:
Post a Comment