* திருப்தி அடையாதவன் ஒருவரையும் திருப்தி செய்யமாட்டான். எவன் எப்பொழுதும் சந்தோஷத்துடனும், திருப்தியுடனும் இருக்கிறானோ, அவனே அனைவரையும் சந்தோஷத்துடன் இருக்கச் செய்வான்.
* நாக்கு பாவமான வார்த்தைகளைப் பேசுவதற்கு தயாராக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
* சோம்பல் அனைத்து விபரீதங்களுக்கும் மூலகாரணமாகிறது. "சோம்பேறி' என்ற சொல்லே அபத்தமானது. அப்படி ஒரு பெயரை வாங்கிவிடவே கூடாது. எப்பாடுபட்டாவது அதனை விட்டுவிட வேண்டும்.
* உலகம் என்பது தர்ம, அதர்மச் செயல்களுக்கான தேர்வு நடக்கும் இடம். மிகுந்த கவனத்துடன் தர்ம, அதர்மங்களைப் பரிசீலனை செய்து, நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.
* கெட்டவர்களின் சகவாசம் நரகம். சாதுக்களின் சகவாசம் சொர்க்கம்.
* சாஸ்திரங்களைப் படித்து அதன் ரகசியங்களை அறிந்தும், அதைக் கடைபிடிக்காதவன் பாவம் செய்தவனை விட கீழானவனாகிறான். எனவே, சாஸ்திரங்களின் கூறியபடி அதனை முறையாக கடைப்பிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
* நாம் செய்யும் அனைத்து செயல்களும் முழுமைபெற செயல்களின் ஆதாரத்தில் தர்மம் இருக்க வேண்டும்.
* எப்போதும், எவரையும் துன்புறுத்த கூடாது, நல்லெண்ணத்துடனும், கெட்ட எண்ணத்துடனும் ஒரு பிராணியை கொடுமைப்படுத்த கூடாது.
* கூரையில்லாத வீட்டில் மழை தாரைகள் விழுவது போல யோசனையில்லாத மனிதனின் மனதில் விரோதிகள் புகுந்து விடுவார்கள், என்பதால் அனைத்து செயல்கள் செய்வதற்கு முன்பாக யோசனையுடன் செய்வது நல்லது.
* எதிரி கூட அதிக தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் கெட்ட வழியில் செல்லும் மனமோ அதைக் காட்டிலும் அதிக நஷ்டத்தை விளைவிக்கும் என்பதால் மனதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
* வண்டு எப்படி பூக்களின் அழகையும், வாசனையையும் சேதப்படுத்தாமல் மதுவை எடுக்கிறதோ, அதுபோல் பாவத்தில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
* போரில் லட்சக்கணக்கான மனிதர்களை ஜெயிப்பவன், உண்மையில் வீரனல்ல. எவனொருவன் தன்னைத் தானே ஜெயிக்கிறானோ, அவன் தான் உண்மையான வீரனாவான்.
* பிறருக்கு உபதேசம் செய்பவன், அந்த உபதேசங்களுக்கு தன்னையும் உட்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான் பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துவது என்பது கடினமான செயல்.
* உலகம் நீர்க்குமிழி மற்றும் கானல் நீர் போன்றது, இந்த உலகை துச்சமாக மதிப்பவனை இறப்பு தொடுவதில்லை. அதாவது, அவன் இறப்பை எதிர்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கிறான்.
* வாழ்க்கையில் பெரிய கஷ்டங்கள் ஏற்படும் போது, கோபத்தை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையான சாரதியாவான். மற்றவர்கள் அனைவரும் கயிற்றைப் பிடிப்பவர்கள் தான்.
* அன்பின் மூலம் கோபத்தையும், நல்ல செயல்கள் மூலம் தீய செயல்களையும்,பொதுநலத்தால் சுயநலத்தையும், உண்மை மூலம் பொய்யையும்வெற்றிகொள்ள வேண்டும்.
* வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது. எவன் அதிகமாகப் பேசுகிறானோ அவன் அதிகம் பொய் பேசுகிறான். வார்த்தைகளை எவ்வளவு குறைக்கமுடியுமோ, அவ்வளவு குறைத்துப் பேச வேண்டும்.
நன்றி
0 comments:
Post a Comment