அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்
காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது பதக்க குவிப்பை துவக்கியுள்ளது. தற்போதைய பதக்க பட்டியலில் இந்தியா வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எடை பிரிவு பளுதூக்குதல் வீராங்கனைகள் இந்த பெருமையை இந்தியாவுக்கு தந்துள்ளனர்.
இந்திய நட்சத்திரங்கள் பதக்க வேட்டையை துவக்கி உள்ளனர். இன்று நடந்த 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.
டில்லியில், 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் இன்று பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சோனியா சானு, சந்தியா ராணி தேவி உள்ளிட்ட இரண்டு வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நைஜீரியாவுக்கு தங்கம் கிடைத்தது: இதில் அபாரமாக செயல்பட்ட நைஜீரியாவின் அகஸ்டினா நிகம் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் சோனியா சானு 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மூன்றாவது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனை சந்தியா ராணி தேவி, வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

There was an error in this gadget

My Blog List

TAMIL MP3 SONG

Amazon Contextual Product Ads