அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

மனதை அதிரவைத்த காதல் கதை

                             ஒரு அழகான கிராமம்.

அந்தக்கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்துகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலைஎதிர்க்க ஆரம்பித்தது. இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.

 உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக்  கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப்   பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர்  மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில்  திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை  வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரிமோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே  உயிர் துறந்தான்..உடனே அந்தப் பெண்னும்  மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன்  வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும்  இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால்  மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

 அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில்  எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய்  அதை துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும்  அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று  எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும்  கறை போகவில்லை.


அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று
கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக
இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால்
 அலறினாள்.   அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,

ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

 
இதைப் படித்ததும் உடனே
 என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
நானே இதை எனக்கு

அனுப்பியவரைத்

தேடிக்கிட்டு

 இருக்கேன்


Untitled
 


0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG