சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் யார் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கே வருகிறார் நாரதர். அவரிடம் சென்று அவர்கள் நாரதரிடம், எங்களுள் சிறந்தவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றனர்.நாரதர்: வள்ளல் சிகாமணிகளே!!! எனக்கு கலகம் செய்துதான் பழக்கமே தவிர, தீர்ப்பு சொல்லி பழக்கமில்லை. அதனால் நீங்கள் சரியாக தீர்ப்பு சொல்லும் யாரிடமாவது செல்லலாம்.
பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.
காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.
நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.
பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.
காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.
நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.
Thanks for my friend...... i got it from my friend' s email
நாரதர் தன் ஞான திருஷ்டியால் பார்க்கிறார்.நாரதர்: குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.
கடையேழு வள்ளல்கள்: ஐய்யய்யோ!!!
நாரதர்: கவலைப்பட வேண்டாம். இதை போல் பல பேர் இருக்கிறார்கள்.
மீண்டும் ஞானதிருஷ்டியால் பார்க்கிறார்.
நாரதர்: பைனான்ஸ் கம்பெனில பணத்த போட்டு ஏமாந்தவங்களுக்கு "மழ நிக்கறதுக்குள்ள" னு சொல்லி பணத்தை வாங்கி கொடுத்த ரெட் அஜித்தை காணவில்லை.
க.வ: ஓ!!! நோ
நாரதர்: சரி இதற்கு சரியான ஆள் நம்ம நாட்டமையோட 3வது பங்காளி கவுண்டர்தான்.
பேகன்:பிரபோ!!! அவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா???
நாரதர்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வெச்சிருந்ததை கண்டு பிடித்தது அவர்தான்.
ஆய்: ஓ!!! அவ்வளவு திறமைசாலியா??? அப்ப அவரிடமே செல்வோம்... அனைவரும் என்ன சொல்கிறீர்கள்???
அனைவரும் ஒத்துக்கொண்டு கவுண்டர் வீட்டுக்கு செல்கிறார்கள்.
வெளியே அவருடைய தந்தை செந்திலை பார்த்து விஷயத்தை சொல்கிறார்கள். செந்தில் அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.
செந்தில்: மை சன்!!!
கவுண்ட்ஸ்: என்னடா பைசன்!!! சவுண்டு கொடுக்கற???
செந்தில்: மை சன்! விருந்தாளிங்க வந்துருக்காங்க... அவுங்க முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க???
கவுண்ட்ஸ்: உனக்கு எங்க இருந்து வந்துச்சுடா மானம்? அதுசரி அது யார்டா நம்ம வீட்டுக்கு விருந்தாளி???
செந்தில்: கடையேழு வள்ளல்களும் நம்ம வீட்டுக்கு உங்கிட்ட ஒரு வழக்கு சம்பந்தமா வந்துருக்காங்க!!! நீ தான் தீர்ப்பு சொல்லனுமாம்...
கவுண்ட்ஸ்: சத்தியராஜ் நடிச்ச படம் வள்ளல் தெரியும். அதுயார்டா கடையேழு வள்ளல்???
செந்தில்: கடைசியா இருந்த 7 வள்ளல்கள்.
கவுண்ட்ஸ்: அது சரி... நம்மகிட்ட தீர்ப்புகாக வந்துருக்காங்க... அதனால ஐ கிவ் ரெஸ்பெக்ட்யா!!! பிரச்சனை என்ன சொல்லுங்க???
பாரி: எங்களில் யார் சிறந்த கொடையாளி என்று தாங்கள்தான் சொல்ல வேண்டும்.
கவுண்ட்ஸ்: ஓ!!! இது ரொம்ப சாதாரண விஷயம்... சரி நீங்க என்ன என்ன செஞ்சிங்கனு சொல்லுங்க.... ஐ கிவ் தீர்ப்பு...
பாரி: நான் தான் பாரி... பரம்பு மலை அரசன்...
கவுண்ட்ஸ்: அதுக்கு என்ன இப்ப??? நீ என்ன பண்ணனு சொல்லு
பாரி: முல்லை கொடிக்கு தேர் கொடுத்தேன்...
கவுண்ட்ஸ்: எது நம்ம மூணாவது சந்து முக்கு வீட்ல இருக்கே அந்த முல்லைக் கொடிக்கா????
செந்தில்: மை சன்... அவுங்கள பத்தி தப்பா பேசாதீங்க... அவுங்க உங்களுக்கு சித்தி முறை ஆகறாங்க...
கவுண்ட்ஸ்: டேய் தகப்பா... நீ அவளையும் விட்டு வெக்கலயா... இவுங்க எல்லாம் போகட்டும்... உனக்கு இருக்கு
பாரி: இல்லை இல்லை.... நான் சொன்னது செடி, கொடி வகையை சார்ந்த முல்லை கொடி... அது படற வழியில்லாமல் வாடியதை பார்த்து என் மனம் பதைத்ததால் அதற்கு நான் சென்ற தேரை பரிசாக வழங்கினேன்
கவுண்ட்ஸ்: ஏன்டா... ஆனா ஊனா யாரங்கே யாரங்கேனு கையை தட்டுவீங்க... இதுக்கு ஒரு தடவை யாரங்கேனு கைய தட்டி குச்சி நட சொல்றத விட்டுட்டு அவ்வளவு காஸ்ட்லி தேர விட்டுட்டு வந்துருக்க... அது என்ன தேர்ல ஏறி நகர்வலமா வர போகுது. உனக்கு மூளையே இல்ல. யு ஆர் அன்செலக்டட்... நெக்ஸ்ட்...
பேகன்: என் பெயர் பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கினேன்.
கவுண்ட்ஸ்: யாரு 16 வயதினிலேல வருமே அந்த மயிலுக்கா???
16 வயது வந்த மயிலே மயிலே
என்னை பாடா படுத்துதடி மயிலே மயிலே
கவுண்டர் தன்னுடைய வழக்கமான பாணியில் கையையும் காலையும் தூக்கி ஆட ஆரம்பிக்கிறார்.
பேகன்: இல்லை இல்லை... நான் சொல்வது பறவை இனத்தை சேர்ந்த மயில்.
கவுண்ட்ஸ்: ஏன்டா உங்க ரவுசுக்கு எல்லாம் அளவே இல்லையா??? அது அப்படியே முச்சு முட்டி செத்துருக்கும்... அப்பறம் கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு மயில் கறி சாப்பிட்டிருப்பீங்க... யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்... நெக்ஸ்ட்
ஆய் எழுனி: என் பெயர் ஆய் எழுனி.
கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? இது பேரா??? யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்
செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...
கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.
மற்ற நால்வரும் அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல அஞ்சுகிறார்கள்.
கவுண்ட்ஸ்: ஹு இஸ் தி நெக்ஸ்ட்???
செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...
கவுண்ட்ஸ்: ஆமாம் இவனுங்க என்ன பண்ணிருப்பானுங்கனு தெரியாதா??? இவனுங்கள பத்தி பாட்டு பாடற 4-5 அள்ளக்கைங்கள வச்சிக்கிட்டு அவனுங்களுக்கு மக்கள் வரி பணத்துல இருந்து வர காச அள்ளி வீசிருப்பானுங்க... இவுங்கள எல்லாம் பாத்துதான் இப்ப இருக்குற அரசியல்வாதிங்க எதுவும் தெரியாத ஜால்ரா கேஸ்ங்கல எல்லாம் மந்திரி ஆக்கறானுங்க...
எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...
செந்தில்: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....
கவுண்ட்ஸ்: ஏன்டா அந்த முல்லைக்கொடி பொண்ணு அல்லிராணிய எப்படியாவது நான் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா அவளை எனக்கு தங்கச்சியாக்கிட்ட... உன்ன நான் இன்னைக்கு பலி போடாம விடமாட்டன்...
கவுண்டர் துரத்த செந்தில் எஸ்கேப் ஆகிறார்
1 comments:
இப்பதிவை சுட வெட்டிப் பயலிடம் அனுமதி வாங்கினீர்களா அல்லது நீங்கள்தான் வெட்டிப்பயலா? பார்க்க, http://vettipayal.wordpress.com/2006/09/06/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2/
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment