இன்று சர்வதேச ஆண்கள் தினம்
எல்லருக்கும் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள்
ஜாலி ஜாலி ......
ஆண்கள்..: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...
முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...
நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...
இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.
போச்சு எல்லம் போச்சு......................
நன்றி தினமலர்
0 comments:
Post a Comment