அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

கவுண்டமணியும் கடையேழு வள்ளல்களும்

சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் யார் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அங்கே வருகிறார் நாரதர். அவரிடம் சென்று அவர்கள் நாரதரிடம், எங்களுள் சிறந்தவர் யார் என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றனர்.நாரதர்: வள்ளல் சிகாமணிகளே!!! எனக்கு கலகம் செய்துதான் பழக்கமே தவிர, தீர்ப்பு சொல்லி பழக்கமில்லை. அதனால் நீங்கள் சரியாக தீர்ப்பு சொல்லும் யாரிடமாவது செல்லலாம்.

பாரி: நான்முகன் புதல்வனே!!! இந்த கடினமான வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதியானவரை நீரே கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.

நாரதர்: மன்னர் மன்னா!!! மேலுலகில் அனைவரும் பிஸியாக உள்ளனர். அதனால் பூவுலகில் இருக்கும் ஒருவரை நீங்கள் அணுகலாம்.

காரி: மூவுலகில் பவனம் வருகின்ற மூர்த்தியே!!! பூவுலகில் இதற்கு சரியாக தீர்ப்பு வழங்கும் தகுதி படைத்தவர் யார் என்றும் நீரே சொல்ல வேண்டும்.

நாரதர்: தானத்தில் சிறந்தவனே!!! பூலோகத்தில் இதற்கு தீர்ப்பு சொல்ல பல பேர் இருக்கிறார்கள். இப்போழுது யார் ஃபிரியாக இருக்கிறார்கள் என்று என் ஞான திருஷ்டியால் பார்த்து சொல்கிறேன்.
85c325865-1[1].jpg

Thanks for my friend...... i got it from my friend' s   email
நாரதர் தன் ஞான திருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: குப்புசாமி வாத்தியார்னா பாடம் சொல்லி குடுக்குற வாத்தியார் இல்ல, சிலம்பம் சொல்லி குடுக்குற வாத்தியார்னு ஊருக்கே தெரியாத உண்மையை கண்டுபிடிச்ச "சின்ன கவுண்டர்" தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.

கடையேழு வள்ளல்கள்: ஐய்யய்யோ!!!

நாரதர்: கவலைப்பட வேண்டாம். இதை போல் பல பேர் இருக்கிறார்கள்.

மீண்டும் ஞானதிருஷ்டியால் பார்க்கிறார்.

நாரதர்: பைனான்ஸ் கம்பெனில பணத்த போட்டு ஏமாந்தவங்களுக்கு "மழ நிக்கறதுக்குள்ள" னு சொல்லி பணத்தை வாங்கி கொடுத்த ரெட் அஜித்தை காணவில்லை.

க.வ: ஓ!!! நோ

நாரதர்: சரி இதற்கு சரியான ஆள் நம்ம நாட்டமையோட 3வது பங்காளி கவுண்டர்தான்.

பேகன்:பிரபோ!!! அவர் அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா???

நாரதர்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். நாட்டாமை தம்பி பசுபதி டீச்சர வெச்சிருந்ததை கண்டு பிடித்தது அவர்தான்.

ஆய்: ஓ!!! அவ்வளவு திறமைசாலியா??? அப்ப அவரிடமே செல்வோம்... அனைவரும் என்ன சொல்கிறீர்கள்???
அனைவரும் ஒத்துக்கொண்டு கவுண்டர் வீட்டுக்கு செல்கிறார்கள்.

வெளியே அவருடைய தந்தை செந்திலை பார்த்து விஷயத்தை சொல்கிறார்கள். செந்தில் அவர்களை உள்ளே அழைத்து செல்கிறார்.

செந்தில்: மை சன்!!!

கவுண்ட்ஸ்: என்னடா பைசன்!!! சவுண்டு கொடுக்கற???

செந்தில்: மை சன்! விருந்தாளிங்க வந்துருக்காங்க... அவுங்க முன்னாடி என்னை அவமானப்படுத்தாதீங்க???

கவுண்ட்ஸ்: உனக்கு எங்க இருந்து வந்துச்சுடா மானம்? அதுசரி அது யார்டா நம்ம வீட்டுக்கு விருந்தாளி???

செந்தில்: கடையேழு வள்ளல்களும் நம்ம வீட்டுக்கு உங்கிட்ட ஒரு வழக்கு சம்பந்தமா வந்துருக்காங்க!!! நீ தான் தீர்ப்பு சொல்லனுமாம்...

கவுண்ட்ஸ்: சத்தியராஜ் நடிச்ச படம் வள்ளல் தெரியும். அதுயார்டா கடையேழு வள்ளல்???

செந்தில்: கடைசியா இருந்த 7 வள்ளல்கள்.

கவுண்ட்ஸ்: அது சரி... நம்மகிட்ட தீர்ப்புகாக வந்துருக்காங்க... அதனால ஐ கிவ் ரெஸ்பெக்ட்யா!!! பிரச்சனை என்ன சொல்லுங்க???

பாரி: எங்களில் யார் சிறந்த கொடையாளி என்று தாங்கள்தான் சொல்ல வேண்டும்.

கவுண்ட்ஸ்: ஓ!!! இது ரொம்ப சாதாரண விஷயம்... சரி நீங்க என்ன என்ன செஞ்சிங்கனு சொல்லுங்க.... ஐ கிவ் தீர்ப்பு...

பாரி: நான் தான் பாரி... பரம்பு மலை அரசன்...

கவுண்ட்ஸ்: அதுக்கு என்ன இப்ப??? நீ என்ன பண்ணனு சொல்லு

பாரி: முல்லை கொடிக்கு தேர் கொடுத்தேன்...

கவுண்ட்ஸ்: எது நம்ம மூணாவது சந்து முக்கு வீட்ல இருக்கே அந்த முல்லைக் கொடிக்கா????

செந்தில்: மை சன்... அவுங்கள பத்தி தப்பா பேசாதீங்க... அவுங்க உங்களுக்கு சித்தி முறை ஆகறாங்க...

கவுண்ட்ஸ்: டேய் தகப்பா... நீ அவளையும் விட்டு வெக்கலயா... இவுங்க எல்லாம் போகட்டும்... உனக்கு இருக்கு

பாரி: இல்லை இல்லை.... நான் சொன்னது செடி, கொடி வகையை சார்ந்த முல்லை கொடி... அது படற வழியில்லாமல் வாடியதை பார்த்து என் மனம் பதைத்ததால் அதற்கு நான் சென்ற தேரை பரிசாக வழங்கினேன்

கவுண்ட்ஸ்: ஏன்டா... ஆனா ஊனா யாரங்கே யாரங்கேனு கையை தட்டுவீங்க... இதுக்கு ஒரு தடவை யாரங்கேனு கைய தட்டி குச்சி நட சொல்றத விட்டுட்டு அவ்வளவு காஸ்ட்லி தேர விட்டுட்டு வந்துருக்க... அது என்ன தேர்ல ஏறி நகர்வலமா வர போகுது. உனக்கு மூளையே இல்ல. யு ஆர் அன்செலக்டட்... நெக்ஸ்ட்...

பேகன்: என் பெயர் பேகன். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை வழங்கினேன்.

கவுண்ட்ஸ்: யாரு 16 வயதினிலேல வருமே அந்த மயிலுக்கா???
16 வயது வந்த மயிலே மயிலே
என்னை பாடா படுத்துதடி மயிலே மயிலே

கவுண்டர் தன்னுடைய வழக்கமான பாணியில் கையையும் காலையும் தூக்கி ஆட ஆரம்பிக்கிறார்.

பேகன்: இல்லை இல்லை... நான் சொல்வது பறவை இனத்தை சேர்ந்த மயில்.

கவுண்ட்ஸ்: ஏன்டா உங்க ரவுசுக்கு எல்லாம் அளவே இல்லையா??? அது அப்படியே முச்சு முட்டி செத்துருக்கும்... அப்பறம் கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு மயில் கறி சாப்பிட்டிருப்பீங்க... யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்... நெக்ஸ்ட்

ஆய் எழுனி: என் பெயர் ஆய் எழுனி.

கவுண்ட்ஸ்: என்ன மேன் பெர் இது??? இது பேரா??? இது பேரா??? யு ஆர் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்

செந்தில்: மை சன்... அதுக்குள்ள அன்செலக்ட் பண்ணிட்டீங்க...

கவுண்ட்ஸ்: ஏன்டா இது என்ன வாய்ல வர விஷயமா??? ஏன் ஒரு அஜித், விஜய், சூர்யானு பேர் வெச்சிக்க வேண்டியதுதான?... அவன் ஸ்ட்ரிக்ட்லி அன்செலக்டட்.

மற்ற நால்வரும் அவர்கள் செய்த தான தர்மங்களை சொல்ல அஞ்சுகிறார்கள்.

கவுண்ட்ஸ்: ஹு இஸ் தி நெக்ஸ்ட்???

செந்தில்: மை சன். அவுங்க எல்லாம் உங்ககிட்ட சொல்றதுக்கே பயப்படறாங்க...

கவுண்ட்ஸ்: ஆமாம் இவனுங்க என்ன பண்ணிருப்பானுங்கனு தெரியாதா??? இவனுங்கள பத்தி பாட்டு பாடற 4-5 அள்ளக்கைங்கள வச்சிக்கிட்டு அவனுங்களுக்கு மக்கள் வரி பணத்துல இருந்து வர காச அள்ளி வீசிருப்பானுங்க... இவுங்கள எல்லாம் பாத்துதான் இப்ப இருக்குற அரசியல்வாதிங்க எதுவும் தெரியாத ஜால்ரா கேஸ்ங்கல எல்லாம் மந்திரி ஆக்கறானுங்க...

எவன் ஒருத்தன் தான் சொந்தமா சம்பாதிக்கிற காசுல மத்தவங்களுக்கு உதவறானோ அவன் தான் உண்மையான வள்ளல்... இப்படியே எல்லாம் ஓடி போயிடுங்க...

செந்தில்: நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....

கவுண்ட்ஸ்: ஏன்டா அந்த முல்லைக்கொடி பொண்ணு அல்லிராணிய எப்படியாவது நான் கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா அவளை எனக்கு தங்கச்சியாக்கிட்ட... உன்ன நான் இன்னைக்கு பலி போடாம விடமாட்டன்...

கவுண்டர் துரத்த செந்தில் எஸ்கேப் ஆகிறார்

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.


இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.
சுண்டைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ:
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
அவரைக்காய்:
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்::
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கத்தரி பிஞ்சு:
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

தேர்தல்




தேர்தல் ,

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
அரசியல் பிழைப்போரால்
அமோகமாக நிகழ்த்தப்படும்
உரிமைத் திருவிழா ....
சாலைகள் தோறும்
ஒலிப்பெருக்கியின் ஓலங்கள்...
வீதிகள் தோறும்
வண்ணத் தோரணங்களின்
சாரங்கள்....


பொதுமக்கள் அனைவரும்
உறவினர்கள் ஆகும்
உலகச் சமாதானதினம் !


வாக்குறுதிப் பள்ளம்
வழிந்து நிரம்பும் , தலைவர்களின்
போதை மிகுதியால்.....


விழாவில் கூடும் சந்தையில்
விற்கும் பொருளாக
வாக்குச்சீட்டு .....


நாளை இறக்கும் கிழவிக்கும்
வாக்குரிமை....
வாக்குச்சாவடிவரைப் பறக்கும்
ஆட்டோக்களுக்கு அன்று
அமோக சவாரிகள்...


ம்ம்ம்...
அற்ப மானிடனுக்குத் தெரியாது
ஓட்டைப் பெற்றுக் கொண்டு
(திரு)ஓட்டைக் கொடுப்பார்களென்று !


தன் ஐந்தாண்டு ஆயுளை
வெறும் ஐந்நூற்றுக்கு விற்றுவிட்டு
அல்லல்படும் அவர்களுக்கு
தேர்தல் ஓர் திருவிழாதான்!


வாக்காளனே ! தேர்தல் ,
தோரணங்கள் கட்ட கோவில் திருவிழாவா ?
புத்தாடை அணிய பொங்கல்தீபாவளியா ?
உன் ஐந்தாண்டு ஆயுளை விற்க ,
தலைவர்கள் எமதூதர்களா ?


உன் ஆறாம் அறிவு
அனாதையாய்க் கிடக்கின்றது ....
அதற்குத் தேர்தலன்று மட்டுமாவது
ஆதரவுகொடு......!


நன்றி

 நண்பனின் வரிகள்

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG