அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

கண்டிப்பா ட்ரை பண்ணுக- த்ரில்லர் மிஸ் பண்ணாதிங்க & வியாபார மரம்

  Copy this onto notepad, press cntrl + H, press 6 in find box and underscore(_ ) in replace box and click replace all button. U will get thrilled.

இந்த text காப்பி பண்ணிக்கவும்... இதை அப்படியே Notepad -இல் பேஸ்ட் செய்யவும்....Notepad -இல்   பிறகு பிரஸ் ctrl + H .....இப்ப  REPLACE மெசேஜ் விண்டோ ஓபன் ஆகும் .. அதில் FIND பாக்ஸ் - இல் 6 என்று கொடுக்கவும் பிறகு REPLACE பாக்ஸ்-இல் underscore(_ ) கொடுத்து replace all பட்டனை கிளிக் செய்யவும்....... இப்ப பாருங்க த்ரில்லர்



6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6669966666996699669 9999999669966666 9966666669966666 6996699999999669 9666699666666666 6666696666666666 666666666666
6669966666996699669 9999999669966666 9966666666996666 9966699999999669 9666699666666666 6666999666666666 666666666666
6669966666996699669 9666666669966666 9966666666699669 9666699666699669 9666699666666666 6669969966666666 666666666666
6669966966996699669 9999999669999999 9966666666669999 6666699666699669 9666699666666666 6699666996666666 666666666666
6669969996996699669 9999999669999999 9966666666666996 6666699666699669 9666699666666666 6999999999666666 666666666666
6669999699996699666 6666699669966666 9966666666666996 6666699666699669 9666699666666666 9999999999966666 666666666666
6669996669996699669 9999999669966666 9966666666666996 6666699999999669 9666699666666669 9666666666996666 666666666666
6669966666996699669 9999999669966666 99666 6666666699666666999 9999966999999996 6666669966666666 6669966666666666 6666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6699666669966666666 6966666666699999 9996699999999669 9666666996666666 6996666699669999 9999669966666996 666666666666
6699666669966666666 9996666666699999 9996699999999666 9966669966666666 6999666699669999 9999669966666996 666666666666
6699666669966666669 9699666666699666 6996699666699666 6996699666666666 6999966699669966 6666669966666996 666666666666
6699999999966666699 6669966666699999 9996699999999666 6699996666666666 6996996699669999 9999669966966996 666666666666
6699999999966666999 9999996666699999 9996699999999666 6669966666666666 6996699699669999 9999 6699699969966666666 66666
6699666669966669999 9999999666699966 6666699666666666 6669966666666666 6996669999669966 6666669999699996 666666666666
6699666669966699666 6666669966699666 6666699666666666 6669966666666666 6996666999669999 9999669996669996 666666666666
6699666669966996666 6666666996699666 6666699666666666 6669966666666666 6996666699669999 9999669966666996 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666
6669966666699669999 9999666666666966 6666666999999996 6666666999999966 9999999966699966 6699666666666666 666666666666
6666996666996669999 9999666666669996 6666666999999996 6666666999999996 9966669966669966 6699666666666666 666666666666
6666699669966669966 6666666666699699666 6666996666996666 6666666666996999 666996666996666699666666666666 666666666
6666669999666669999 9999666666996669 9666666999999996 6666666666669966 9969669966669966 6699666666666666 666666666666
6666666996666669999 9999666669999999 9966666999999996 6666666666699666 9966969966669966 6699666666666666 666666666666
6666666996666669966 6666666699999999 9996666996996666 6666666669966666 9966699966669966 6699666666666666 666666666666
6666666996666669999 9999666996666666 6699666996699666 6666666999999996 9966669966669966 6699666666666666 666666666666
6666666996666669999 9999669966666666 6669966996666996 6666666999999996 9999999966699996 6699666666666666 666666666666
6666666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 6666666666666666 666666666666

---------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாபார மரம்


------------------------------------

தமிழ் மொழியின் பெருமை-- எந்த மொழியில் உள்ளது

 தமிழன்

  

இந்திய கிரிக்கெட் - 2010 சாதனை - டாப் 10

1

இந்திய கிரிக்கெட் - 2010 இல் விளையாடிய 5 டெஸ்ட் தொடரில் 3 இல் வெற்றியும் 2 இல் சமன் செய்தது..சென்ற வருடம் போல் கிரிக்கெட் டெஸ்ட் தர வரிசையில் தொடர்து முதல் இடத்தில உள்ளது.

2010 இல் விளையாடிய 5 டெஸ்ட் தொடர்....

பங்ளாதேஷ் ---- 2 - 0  வெற்றி
சவுத் ஆப்ரிக்கா --- 1 - 1 சமன்
ஸ்ரீ லங்கா  --- 1 - 1 சமன்
ஆஸ்திரேலியா ---- 2 - 0  வெற்றி
நியூ ஜலன்ட் ---- 1   - 0  வெற்றி
சவுத் ஆப்ரிக்கா --- 0 - 1  [விளையாடி கொண்டு இருக்கிறது]

2 ஹர்பஜன் 

இந்திய VS சவுத் ஆபிரிக்கா
பிப் - 14 - 18
இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்து முதிலத்தில் இருக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் ஹர்பஜன் சிங்க் தனது சிறப்பான பந்து வீச்சில்   சவுத் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது..
[59  ரன்   - 5 விக்கெட்] . இவர் தற்பொழுது நியூ சலனத் எதிராக அடித்த 2 சதம் மறக்க முடியாதது.

3  சச்சின் டெண்டுல்கர்  

இந்திய VS சவுத் ஆபிரிக்கா
பிப் - 24

இந்த  2 வது ஒரு நாள் போட்டியில் சச்சின் 200 ரன் எடுத்து சையத்  அன்வர் சாதனையை முறியடித்தார்....இந்திய இந்த ஆட்டத்தில் 401 ரன் எடுத்தது..... 153 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.......


4  ஆசியா  கோப்பை

இந்திய VS ஸ்ரீ லங்கா
ஜூன்  - 24
ஆசியா கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய வெற்றி  பெற்றது.......
 இந்திய எடுத்த ரன் 268 /6 இதில் தினேஷ் கார்த்திக் 68 ரன் எடுத்தார் மற்றும் நெஹர 4 முக்கிய விக்கெட் விழ்த்தினர். 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.......
5  பரபப்பான ஆட்டம்

இந்திய VS சவுத் ஆபிரிக்கா
பிப் - 21

இந்த  1வது ஒரு நாள் போட்டியில் ....இந்திய 225  ரன் எடுத்தது..... ஆனால் இறுதில் சவுத் ஆப்ரிக்காவின் பர்னெல்(49 ) ஸ்டெய்ன் (35 )ரன்  எடுத்து வெற்றி நோக்கி செல்லுகையில் தோனி கடைசி ஓவர் கடைசி பந்தில் பர்னேல்லை ரன் அவுட் ஆக்கினார்.  
6  சச்சின் டெண்டுல்கர்  

சச்சின் சிறந்த உலக விளையாட்டு வீரர் அவார்ட் வாங்கினார்.  சச்சின் 200 ரன் எடுத்து சையத்  அன்வர் சாதனையை முறியடித்தார்....2011 உலக கோப்பை கிரிக்கெட்டில் கிரிக்கெட் தூதுவரக தேர்தெடுக்கபட்டார்.
7  வி.வி.எஸ் லட்சுமணன்
இந்திய VS ஸ்ரீ லங்கா 3 வது டெஸ்ட்
ஆகஸ்ட் 3 - 7 

இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற 257 ரன் தேவைபட்டது... ஆனால் இந்திய 62 ரன்கள் எடுத்து 4 முக்கிய விக்கெட் இழந்து தடுமாறி கொண்டு இருந்தம்பொழுது லக்ஷ்மன் முதுகு வலியுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன் எடுத்து இந்திய வெற்றி பெற உதவினார்.

8  இந்திய vs நியூசலாந்து
கம்பீர் தலைமையில் நியூசலாந்து எதிராக  5 - ௦0  என்ற விதத்தில் ஒருநாள் தொடரை வென்றது.இந்த தொடரில் சச்சின் , சேவாக் , தோனி , ரெய்ன, ஜாகிர் கான் ,ஹர்பஜன் இல்லை .இந்த  5 வது ஒரு நாள் போட்டியில் நியூசலாந்து நன்றாக விளையாடியது இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற 316 ரன் தேவைபட்டது. யூசுப் பதான்  அதிரடியாக ஆட்டமிழக்காமல் 12 3 ரன் எடுத்து இந்திய வெற்றி பெற உதவினார். 

 9  இந்திய vs சொத் ஆப்ரிக்கா t20 - t20 

இந்த ஆட்டத்தில்   ரெய்ன அதிரடியாக ஆடினார். 101  ரன் எடுத்து இந்திய வெற்றி பெற உதவினார்.  இந்திய இந்த ஆட்டத்தில் 185  ரன் எடுத்தது..... 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.......

10  வி.வி.எஸ் லட்சுமணன்

இவர் ஆஸ்திரேலியா எதிரா இஷாத் சர்மாவுடன் இணைந்து விளையாடி இந்திய வெற்றி பெற உதவினார். 



..................... இந்த பயணம் 2011 தொடர வேண்டும்...................

 

மெயில் படித்தல் காசு

இந்த லிங்க் கிளிக் பண்ணுக
<a href="http://www.PaisaLive.com/register.asp?338991-343924.5"><b><font color="#FF0000" size="4">Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!</font></b></a>


இந்த மாதிரி விண்டோ ஓபன் ஆகும். அதுல உங்க ஈமெயில் அட்ரஸ் குடுங்க,,,





இதில் சேர்தவுடன் உங்களுடைய அக்கௌண்டில் 99 ரூபாய் வந்துவிடும்.

உங்களுடைய நண்பர்களை சேர்தால் 50 ரூபாய் வந்துவிடும்.

தினமும் வரும் மெயில் படித்தால் போதும் உங்களுடைய அக்கௌண்டில் ௦௦௦0.25 பைசா முதல் 1 ரூபாய் கிரெடிட் ஆகும்.




















தினமும் 5 மெசேஜ் வருமாம்..........

மனதை அதிரவைத்த காதல் கதை

                             ஒரு அழகான கிராமம்.

அந்தக்கிராமத்தின் தலைவருக்கு ஒருபெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்துகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்காதலிக்க ஆரம்பித்துவிட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலைஎதிர்க்க ஆரம்பித்தது. இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.

 உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக்  கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப்   பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர்  மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில்  திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை  வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரிமோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே  உயிர் துறந்தான்..உடனே அந்தப் பெண்னும்  மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன்  வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும்  இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால்  மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

 அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில்  எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய்  அதை துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும்  அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று  எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும்  கறை போகவில்லை.


அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று
கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக
இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால்
 அலறினாள்.   அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,

ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

 
இதைப் படித்ததும் உடனே
 என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
நானே இதை எனக்கு

அனுப்பியவரைத்

தேடிக்கிட்டு

 இருக்கேன்


Untitled
 






இலவச நிலம் கொடுத்து தன் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்கொண்ட அறக்கட்டளை

பெரம்பலூரில் அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுப்பது போல் கொடுத்து, தங்களால் வளைக்கப்பட்ட நிலத்தின் மதிப்பை உயர்த்திக் கொண்டதாக, ராஜாவின் குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை மீது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பெரம்பலூரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் குடும்பத்தினரால், அவரது தந்தை மற்றும் தாய் பெயரில் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் ஆகியன அமைக்க இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. அந்த நேரத்தில், ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம், அரசு கல்வி நிறுவனங்களுக்கு, தானே இடம் கொடுப்பதாக ராஜா அறிவித்தார். அதன்படி பெரம்பலூர் - அரியலூர் சாலையில் உள்ள குன்னம் ஒதியம் பிரிவு ரோட்டில் 30.28 ஏக்கர் நிலம் இலவசமாக, ராஜாவின் குடும்ப அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. அதேபோல், குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலை கலை, அறிவியல் உறுப்பு கல்லூரி கட்ட 8.5 ஏக்கர் நிலத்தையும், ராஜாவின் சொந்த ஊரான வேலூரில் அரசு பாலிடெக்னிக் கட்ட ஏழு ஏக்கர் நிலத்தையும் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம், முன்னாள் அமைச்சர் ராஜா வழங்கினார். இதன் மூலம், மாவட்ட மக்கள் மத்தியில் ராஜாவுக்கும், அவரின் குடும்பத்தார் மீதும் செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக ஏக்கர் கணக்கில் நிலம் வழங்கியதால், கட்சியிலும் ராஜாவின் செல்வாக்கு அதிகரித்தது. அரசு கல்வி நிறுவனங்களுக்கு இலவச நிலம் வழங்கியது, தன் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்ளவே என்பதை தற்போது பலரும் கூறுகின்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட்) பெரம்பலூர் மாவட்ட செயலர் செல்லத்துரை: ராஜா, தன் பெற்றோர் பெயரில் நடத்தி வரும் ஆண்டிமுத்து - சின்னப்பிள்ளை அறக்கட்டளை மூலம் குரும்பலூர், ஒதியம் பிரிவு ரோடு, மேலூர் ஆகிய இடங்களில் 400 ஏக்கர், 500 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் 25 ஆயிரம் முதல் மூன்று லட்ச ரூபாய்க்குள் வாங்கினார். தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தான் நிலம் வாங்கிய பகுதிகளில் இலவச நிலம் தருவதாக கூறி, மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கொண்டு வந்தார். இதன்மூலம் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் தன் இமேஜை உயர்த்திக் கொண்டார். ஆனால், அவர் அரசுக் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக நிலம் கொடுத்த இடங்களில் தற்போது, ஏக்கர் 10 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை மதிப்பு உயர்ந்துள்ளது.

அறக்கட்டளை பெயரில் வாங்கிய நிலத்தில் மிகக்குறைந்த அளவு நிலத்தை இலவசம் என்ற பெயரில் கொடுத்து, அந்த இடத்தின் மதிப்பை பலமடங்கு உயர்த்தி ராஜா, "ராஜதந்திரமாக' செயல்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அவர்களின் அறக்கட்டளைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அங்கு அரசுக் கல்வி நிறுவனங்கள் வருவது தெரியாது. கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு தற்போது ஏமாந்துபோய் நிற்கின்றனர். லாபநோக்கமின்றி நிலத்தை ராஜா வாங்குவது என்றால், அப்போதே விவசாயிகளிடம் கல்வி நிறுவனங்கள் வருவது பற்றி திறந்த மனதுடன் சொல்லியிருக்க வேண்டும். தற்போது குரும்பலூரில் அறக்கட்டளைக்கு சொந்தமாக 350 முதல் 400 ஏக்கர் நிலமும், மருத்துவக் கல்லூரி அருகே 600 ஏக்கர் நிலமும், பாலிடெக்னிக் அமையவுள்ள இடத்தில் 350 ஏக்கர் நிலமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இடத்தில் பல ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றும், மீதியுள்ள நிலத்தை தங்களின் கைவசம் வைத்தும் உள்ளனர். இங்கெல்லாம் நிலம் வாங்க உதவிய அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் கூட, 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது, என்றார். இப்பிரச்னைகளை முன்வைத்து பெரிய அளவில் போராட்டத்துக்கு விவசாயி சங்கங்கள் தயாராகி வருகின்றன


***** thanks for dinamalar ******

வெற்றிக்கு ஆறு படிகள்

நூற்றாண்டுகள், நூற்றாண்டுகளாக "மைதாசின் மாயக்கை" படைத்த, வெல்லவே முடியாத, எண்ணற்ற தடைகளைத் தகர்த்தெறிந்து இமயத்தை வென்ற எண்ணிலா மனிதர்கள் சுட்டி க்காட்டும் வரலாறை நாம் மறுக்க இயலுமா, மறைக்கத்தான் முடியும? ஒரு சிலருக்கு, அவர்களின் மகத்தான வெற்றி குருட்டு அதிர்ஷ்டத்தின் பயனாகத் தெரியலாம். மற்றும் சிலருக்கு அது அவர்களுடைய கடும் உழைப்பின் பரிசாகவும் தென்படலாம். ஆனாலோ, ஆண்ட்ரூ கார்னகி,, ஹென்ரி ஃபோர்டு ஆகியோரின் வியப்பூட்டும் வெற்றிகளின் பின்னே ஒளிந்துள்ள உண்மை மிகவும் சுவையானது என்பதை மறுக்கவே முடியாது!
ஒவ்வொரு மனிதனும் அடைய அவாவுறும்ஒரு உயர்ந்த நிலைதான் வெற்றி என்பது. கணக்கற்ற பலர்போல, சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வழிகளை நீங்களே திறக்க முடியும். எப்படி என்று பார்க்கலாமா?

வெற்றிப்படி-1: அவா அல்லது ஆசை.
எந்த ஒரு இலக்கையும் அடையும் நடவடிக்கைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால், நாம் நமது இலக்கை அடைய எண்ணும் ஆசைக்கு நமது மனம் எவ்வாறு பதில் குரல் கொடுக்கிறது என்பதுதான். விறுப்பும், வெறுப்பும், வேண்டியும், வேண்டாமலும், தொட்டும், தொடாமலும் ஆன மனநிலையும் எண்ணமும் தோன்றினாலோ, வெளிப்பட்டாலோ, உள்ளத்தின் ஊக்கத்தின் அளவு குறைந்து, தோல்வியோ, அல்லது, பாதி வெற்றியோதான் எ ய்த முடியும்.
ஒரு இலக்கை அடையவேண்டும் என்றால், நமது திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி, வெற்றியெனும் இலக்கை எட்டும்வரை முழுமூச்சான எண்ணமும், உத்வேகமும், திட சித்தமும் கொள்ளவேண்டும். ஆசை அல்லது அவாதான் இந்தத்திட மனநிலையை உருவாக்கும்.
இந்த ஆசையெனும் விசைதான் மனிதகுலத்தை ஒவ்வொரு நிமிடமும் புதிய அறிவைப் பெறவேண்டுமென்ற ஆற்றொணாத் தாகத்திற்கு ஆளாக்கி, அறிவியலின் எல்லா எல்லைகளையும் தாண்டி, நம்பவே முடியாத, என்றுமே எதிர்பார்க்கவே முடியாத அளவு உயர்ந்த இலக்கை அடையவைத்துள்ளது என்றால் மிகையாகுமோ?

இந்த அவாவெனும் விசையை உருவாக்கி, வளர்ப்பது ஒன்றும் இமயமலையில் ஏறுவதுபோல் கடுமையானதும் அல்ல, இயலாததும் அல்ல. நாம் செய்யவேண்டியது எல்லாம், நமக்கு வேண்டியதை நோக்கி, நம் இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருப்பதுதான், இடைவிடாமலும், எந்த இடையூறுகளுக்கிடையிலம். எளிதாகச் சொன்னால், இவ்வளவுதான்! நிற்காதே! நிற்காதே! ஓடு! ஓடு! ஓடிக்கொண்டேயிரு, நிற்கவே நிற்காத குதிரையைப்போ ல்! குறைந்தபட்சம் நடந்துகொண்டேயாவது இரு. ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிடாதே! "நீ விட்டுவிட்டு நிற்கும்வரை, நீ தோல்வி அடைவதில்லை" என்ற மகத்தான பொன்மொழியை மறக்க முடியுமா! "நாம் எதையெல்லாம் மிக்க ஆர்வத்துடனும், இடைவிடாமலும் அடைய ஆசைப்படுகிறோமோ, அவையெல்லாவற்றையும் அடைவோம், எய்துவோம்", என்ற நெப்போலியனின் ொன்மொழியை மறக்கத்தான் முடியுமா!

வெற்றிப்படி - 2: இலக்கு
கடும் முயற்சிக்குப் பின்பும்கூட, பெரும்பாலோர் திருப்திகரமான முடிவுகளைப் பெற இயலாதுபோவதன் முதற்காரணம் என்னவென்றால், அவர்கள், தாங்கள் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதையே தெரிந்து கொள்வதில்லை. உங்களுடைய இலட்சியம் வெள்ளோட்டமாகவோ, அரைகுறையாகவோ இருக்கக் கூடாது. உங்களுடைய இலக்கை அடைவதற்கு முன்பு, அந்த இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தவிதத்தில், எவ்வாறெல்லாம் மாறுபடும், வேறுபடும் என்பதை முன்கூட்டியே உணரவேண்டும், யோசிக்க வேண்டும். நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் துல்லியமாகத் திட்டவட்டமாக, உள்ளங்கை நெல்லிக்கனிபோல, சந்தேகமே இல்லாமல் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடைகள் கட்டாயம் வேண்டும்: இலக்கை அடைந்தபின் உங்கள் வாழ்க்கை எந்தமுறையில் இப்போது இருப்பதிலிருந்து வேறுபடும்? முன்னேறுமா, மாறுபடுமா? இலக்கை அடைந்தபின் நாம் எவ்வாறு உணர்வோம்? நமது நோக்கு எவ்வாறு மாறுபடும்? எந்தவிதமானச் சந்தர்ப்பங்களில், நிலைகளில் நாம் நிற்போம், ஆட்படுவோம்? நீங்கள் இலக்கை எட்டியபின், உங்களைச் சுற்றியுள்ள மக்கள் எவ்வாறு உங்களால் பாதிக்கப் படுவர்? அவர் எவ்வாறு எதிர்ச்செயல்படுவர்? நீங்கள் இலக்கை எய்துவது என்றால் என்ன, என்ற தெளிவான, முடிவான, சித்திரம் உங்கள் மனத்திரையில் விரிக்கப்பட வேண்டும்.

வெற்றிப்படி - 3: நம்பிக்கை
நம்பிக்கையினால்தான் ஆசை பிறக்கிறது. யாரேனும் மறுக்க முடியுமா?
ஆசையும், நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்றால் மிகையாகாதன்றோ! இந்த நம்பிக்கைதான், ஊக்கம் எனும் நெருப்பை அணையாமல் எரியவிட்டுக் காத்து ஒளிர வைத்து நம்மை, நமது இலக்கை நெருங்கச் செய்கிறது. நம்பிக்கை என்பது மலைகளையெல்லாம் அசைக்கவும், இளக்கவும் உடைக்கவும் செய்யும். வெற்றியைக் கொன்று குவிக்கும் எதிரிகளான, தேவையில்லாத பயம், நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளுதல், அநாவசியமான கவலை, துக்கம், சுயமரியாதைக் குறைவு ஆகிய வற்றையெல்லாம் உருக்கி, இளக்கி, அசைத்துக் கரைக்கவல்லது நம்பிக்கைதான்இலக்கை நமது மனதில் திடமாக அமைத்தபின்னர், இந்த அவா விசையானது கடக்கவே முடியாதவைபோல் தோற்றம் கொடுக்கும் தடைகளை நோக்கி நம்மை விசிறி எறியும். நாம் நமக்கு விருப்பமான வெற்றி முடிவை அடைவோம் என்ற அசைக்கவே முடியாத நம்பிக்கை நம்மை வெற்றியை நோக்கியே உந்தித் தள்ளும். இந்தத் திட நிலையைப் பிரதிபலிக்க மனத்தை இயக்கிவிட்டால், ஆச்சரியகரமான மாற்றங்களும், வெற்றியின் அடையாள ங்களும் தோன்ற ஆரம்பிக்கும். நம்பிக்கையின் அபரிமிதமான சக்தியையும், அதன் ஆச்சரியகரமான வெற்றிகளையும குறித்து பலரும் சான்றளித்தாலும், இன்னும் பலபேர்க்கு, பரிபூரணமான அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தபோதிலும், மலையளவு எதிர்ப்புகள் வருங்காலல் லாபகரமான முடிவுகள் வருமா, கிட்டுமா, என்ற சந்தேகம்தான்! வரும் தடைகள் உளவியலான தாகவோ, உடல்நிலையை ஒட்டியதாகவோ இருந்தாலும்,

"எதுவும் சரியான வழியில் செல்வதில்லை, எல்லாமே தவறாகிவிட்டன" என்ற ஒரே ஒரு தவறான எண்ணக்கீற்று மாத்திரம், இமயத்தையே வெல்லும் மனவுறுதி கொண்டவரையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடும் ஒருநொடியிலேயே! ஆனால் இதே இந்தச் சந்தர்ப்பங்களிலும், நிலைகளிலும்தான் நம்பிக்கையும், விசுவாசமும் மகத்தான வெற்றி விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அனுபவித்துத்தான் உணரவேண்டும் என்பது உண்மை. உங்கள் மேல் நம்பிக்கை, உங்கள் செயலில் நம்பிக்கை, செயலை நிச்சயமாகச் செய்து முடிப்போம் என்ற விசுவாசமும், நம்பிக்கையுமே வாழ்வின் வெற்றுக்கு உறுதுணை!

ஒரு சிலர் உண்டு - "ஆமாம்! சொல்லுவது எளிது, செய்வது கடினம்" என்று தனக்குத்தானே குறைபடடுக் கொண்டு, உளவலிமையிலா திருப்பவர்கள். இந்த மனப்போக்குதான் எல்லாத் துன்பங்களையும் சிரஞ்சீவியாக வாழவைத்து உங்களையே அழிக்கும் முதல் எதிரியாகும். நம்பிக்கை வேண்டும் என்பதில் விசுவாசமாக இருங்கள். நீங்கள் தாங்களாகவே நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
ஒரு காகிதத்தில் உங்களது இலக்குகளையெல்லாம் அழகாக எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொரு காலையும் எழுந்தவுடனும், இரவு உறங்கப்போகு முன்னரும் "இதை நான் செய்து முடிக்க வேண்டும்" என்று திருப்பித் திருப்பிச் சொல்லிப் படியுங்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள். "காலப் போக்கில், விரைவில் நாம் வெற்றி பெறுவோம்" என்று உங்களுக்கே, நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அன்றாட மற்ற வேலைகளில் ஈடுபடும்போதுகூட, உங்கள் இலக்குகளை அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள், "வெற்றி பெறுவேன்" என்று நினையுங்கள். இப்படிச் சொல்வது உங்கள் மனதை நீங்களே எமாற்றுவதாக ஆரம்பத்தில் எண்ணலாம். அனால், போகப்போக ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவதைக் காண்பீர்கள்.

வெற்றிப்படி - 4:  திட்டம்.
நம்பிக்கை எனும் கரும்பாறையானக கட்டமைப்பின் மீது இலக்கை நிர்ணயித்துவிட்டீர்கள். ஒவ்வொரு செயலுக்கும், அதன் வெற்றிக்கும், இடம், பொருள், ஏவல் என்ற மூன்றும் இன்றியமையாதவை. செய்யும் இடம் முதல் தேவை. செய்வதற்குச் சிலரது உதவி தேவைப்பட்டால், அவர் யார் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கு, எண்ணம், செயல் ஆகியவற்றின் துல்லியமான வரைபடம் வரையுங்கள். அதன்படி செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!

ஆனால் ஒன்று! உங்களுடைய திட்டம் சரிவர வேலை செய்யுமா, உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்குமா, என்பதை ஆராயவேண்டும். வரைந்த திட்டம் கற்பாறையாக இல்லாமல், மாறுதல்களை ஏற்றுக் கொள்பவையாகவும் இருக்கவேண்டும். ஆனால் ஒரு எச்சரிக்கை! தீர ஆலோசித்துத் தீட்டிய திட்டத்தில், பின்னர் மாறுதல்களை உட்படுத்துவதற்கு முன்பு, அந்த மாறுதல்கள் தேவைதானா, காலப்போக்கில் நீடித்து நிற்குமா, என்று தீர யோசனை செய்தபின்தான் அந்த மாறுதல்களைத் திட்டத்தில் புகுத்தவேண்டும்.
எதோ ஒன்று செய்து, ஏதோ ஒரு இலக்கில் முடிவடைவதையும் சிலநேரம் தவிர்க்க முடியாது. எதிர்பார்த்த வெற்றி விரைவிலேயே கிடைத்துவிடலாம், தாமதமும் ஆகலாம். "சங்கிலித் தொடர் நிகழ்ச்சி" அல்லது "வண்ணத்துப் பூச்சி நிகழ்வு" என்பது இதற்குப் பெயர். இங்கும், அங்குமாக திட்டத்தில் நீங்கள் செய்த மாறுதல்கள், ஆச்சரியகரமான மேல்விளைவுகளையும் ஏற்படுத்தி, அதிசயப்படும் அளவு வெற்றியைக் கொடுப்பதும் உண்டு. தோல்வியையும் சிலநேரம் தழுவவேண்டியச் சங்கடமான நிலைமையும் சிலசமயம் ஏற்படலாம். எதற்கும் துணிந்து, தயாராக இருக்கவேண்டும்.

வெற்றிப்படி - 5: உருவகப்படுத்துதல்.
உள்ளத்தில் எழும் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது என்பதுதான் இது. "மனக்கோட்டை" என்றுகூடச் சொல்லலாம். நாம் இலக்கை அடைந்துவிட்டதாக எண்ணி மனதில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உள்ள எழுச்சிக்கு மிகவும் ஏதுவானது. இது ஒரு மிகச்சிறந்த பயனைக் கொடுக்கவல்லது. இது உங்களது அவாவிற்கும், விடாமுயற்சிக்கும் மணிமகுடம் சூட்டவல்லது, எனெனில், இதன்மூலம் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்துவிட்டதாகவே உள்ளம் எண்ணி , மகிழ்ந்து அமைதியுறுகிறது.

மனத்தளவில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் மகிழ்ச்சி, மேலும் என்னவெல்லாம் நன்மைகளைக் கொடுக்கிறது? முழு மன நிம்மதி, ஒரு நோக்கம் முடிவடைந்துவிட்டதென்று. அக்கம்பக்கத்தில் உள்ள மற்றவர்களும் நம்மைப் பாராட்டுவதை நாம் உளத்தளவில், மானசீகமாக உணர்கிறோம். இதுவே நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்து, நம் அவா-விசையை உந்தித்தள்ளி, நம் நம்பிக்கையைப் பலப்படுத்தி நம்மை நம் இலக்கை நோக்கி முன்னேற வைக்கிறது. அதிசயம், ஆனால் உண்மை!

வெற்றிப்படி - 6: ஆழ்மன சக்தி
ஆழ்மனதின் அடிவாரத்திலிருந்துதான் தோல்வி அல்லது வெற்றிச் செடியின் விதை முளைக்கிறது. ஒவ்வொருவரின் சுயபிம்பம ஆழ்மனதிலிருந்துதான் வெளிப்படுகிறது. "இவன் இப்படிப் பட்டவன்தான், ஐயா, இவன் மாறவே மாட்டான்" என்கிறார்களே, அதுதான் இது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த சுய பிம்பம் எளிதாக மாற்றப்படக் கூடியது. இந்தக் கட்டுரையைச் சரியாகவும், முறையாகவும் படித்துக் கூறப்பட்டக் கருத்துகளைச் செயல்படுத்தினால் எந்த ஒரு சுபாவத்தையும், உள்ள நிலையையும் எளிதில் மாற்றிவிடலாம். திறந்த மனப்பான்மையையும் உருவகப் படுத்தும் வழிமுறையையும் மேற்கொண்டு இந்தப் பயன்பெறலாம்.
ஆண்ட்ரூ கார்னகி தன் தொழிலைத் துவங்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, துறையிலோ ஆழ்ந்த திறமையில்லாதவராகவும், சாதாரணமான ஒரு மனிதராகவும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தன் கடும் உழைப்பாலும், மேற்குறிப்பிட்ட வழிமுறைகளாலும், பலனடைந்து, பல மில்லியன்களை ஈட்டி எல்லோருக்கும் அவர் கொடுத்தார் என்பது இன்றைய அழிக்கவே முடியாத வரலாறு! கார்னகியின் தத்துவம் இன்றும் அமரத்துவம் வாய்ந்து சிரஞ்சீவியாக வாழ்வதை ஆயிரக்கணக்கில் கிடைக்கும் கார்னகியின் வெற்றிப் புத்தகக் குவியல்கள் நிலைநாட்டுகின்றன!
மேற்குறிப்பிட்ட ஆறு படிகளை வாழ்வில் நுட்பமாகப் பயன்படுத்தினால் இயலாத செயல் என்பது எதுவுமே இருக்காது!

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG