அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!

அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!




--------------------------------------------------------------------------------

நடிகர் அஜித்குமாருக்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புகைச்சல் இன்னமும் குறைந்தபாடில்லை. ஏற்கனவே, தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன்தான் நான் பணியாற்ற முடியும்... அஜீத்துக்காக காத்திருக்க முடியாது என்று அறிக்கை விட்டு, பரபரப்பை ஏற்படுத்திய கவுதம் மேனன் இப்போது அஜித்திடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-






10 வருஷங்களா அஜீத்துடன் பேசிட்டு இருக்கேன். ஒவ்வொரு தடவை சந்திக்கும்போதும், 'நம்மைச் சேரவிடாமல் பண்றாங்க... பிரிச்சுடுறாங்க'ன்னு சொல்வார். இந்தத் தடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு சொன்னார். முதலில் ஜூலையில் பண்ணலாம்னு சொன்னார். ரெடியா இருந்தேன். அப்புறம் டிசம்பர்னு சொன்னார். திடீர்னு போன் பண்ணி, 'வெங்கட்பிரபுவை எனக்குப் பிடிக்கும். அவர் ஐந்து ஹீரோ சப்ஜெக்ட் சொன்னார். அதில் ஒருத்தரா நடிக்கிறேன்'னு சொன்னார். இவ்வளவு பெரிய ஹீரோ ஐந்து ஹீரோவில் ஒருத்தரா ஏன் நடிக்கணும்னு ஆச்சர்யம். ஆனாலும், சரின்னு சொன்னேன். அப்புறம் ஜெமினி மனோகர் பிரசாத்கிட்ட படம் பண்ணலாம்னு கேட்டு இருக்கார். அவங்க என்னைச் சொல்ல, அஜீத் வேண்டாம்னு சொன்னாராம். அப்புறம் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், 'மதராசபட்டின்ம்' விஜய் ரெண்டு பேரிடமும் 'எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க'ன்னு கேட்டிருக்கார்.






இதெல்லாம் நடக்கும்போது, இதற்கிடையில் நான் யாருன்னு யோசிச்சேன். இதை எல்லாம் அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஏனோ... சொல்லலை. ஆனால், 'கௌதம்கிட்ட போனில் சொல்லிட்டேன்'னு சொல்லி இருக்கார். அது உண்மை இல்லை. இனிமேல் அஜீத்திடம் போய் நிற்கணும்கிற தேவை எனக்கு இல்லை.

சிரிப்பு வருது
















நகைச்சுவை













அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல்

அஜித்தின் மங்காத்தா படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு விடை கி‌டைக்கவே பல மாதங்கள் ஆன நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தின் பூஜை கடந்த 2ம்தேதி நடைபெற்றது. தலயின் அடுத்த படம் மங்காத்தா என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் மங்காத்தா பற்றி தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. பூஜை போட்ட கையோடு விறுவிறுவென டிரைலரை எடுத்து முடித்திருக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு
அப்படத்தின் டிரைலரை நாளை (20ம்தேதி) ரசிகர்களுக்கு காட்டப் போகிறார்.



 
இந்நிலையில் மங்காத்தாவில் முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிக்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கிலும் இயக்க திட்டமிட்டிருக்கும் வெங்கட்பிரபு, தெலுங்கில் நாகார்ஜூனாவை ஹீரோவாக்குகிறார். தமிழில் நாகார்ஜூனா நடிக்கும் கேரக்டரில், தெலுங்கில் அஜித் நடிக்கப் போகிறாராம். சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் ராவணன் படத்தில் விக்ரம் - அபிஷேக் பச்சன் நடித்ததைப் போல மங்காத்தாவில் அஜித்தும் - நாகார்ஜூனாவும் மாறி மாறி நடிக்கப்போகிறார்கள்.



நம்ம ஊர் – 25


நம்ம ஊர் – 25


கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.


காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம்.


கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும்.


ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க.


சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும்.


தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட்டி அடிச்சாலும் ஸ்டடியா இருக்கறவங்க.


சச்சினும் தீபிகா படுகோனும் விளம்பரத்துல வந்து பினாயிலை வாங்கிக் குடிக்கச் சொன்னாக்கூட அதுக்கும் தயாரா இருப்போம்.



நம்ம நிலத்துல விளையற வெளிய விளைச்சலை வித்துட்டு கடைக்கு போய் அரிசி வாங்கி சாப்பிடுற ஜென்மம்.


கால்ல மாட்டுற செருப்பை AC ஷோரூமில் விப்பாங்க. சாப்பிடுற காய்கறிகளை தெருவோரத்தில் விப்பாங்க.


50 ரூபா சினிமா டிக்கட்ட பிளாக்ல 100ரூபாய்க்கு வாங்கி ஊழலை ஒழிக்கப் போறாடும் கதாநாயகன் கதைக்கு விசிலடிக்கும் ரசனைக்காரர்கள்.


ஆர்டர் பண்ணா பிஸ்ஸா, ஆம்புலன்ஸ் போலிஸை விட சீக்கிரமா வந்து சேறும்.


செயற்கை வாசம் உள்ள லெமன் குளிர்பானத்தை குடித்து, இயற்கையான லெமன் சாற்றை சாமான்கள் துலக்கப் பயன்படுத்துவார்கள்.


எங்க ஊரு கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார்கள் அவங்களோட பசங்களை மட்டும் பிரைவேட் ஸ்கூலில் படிக்க வைப்பாரு.


பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை தனியார் நடத்த, அரசாங்கம் சாராய கடை நடத்தும்.


கவிதை படிக்கறவங்களை விட கவிதை எழுதுறவங்க அதிகமா இருப்பாங்க.


தேர்தல் சமயத்துல ஓட்டுக்கு துட்டு கொடுத்து பல 100 கோடிகள் செலவு பண்ணி மக்கள் சேவைக்காக மட்டுமே ஆட்சி பிடிக்கும் புண்ணியவான்கள் இருக்கும் தேசம்.


ஒரு லிட்டர் கோக், பெப்ஸி, ஒரு லிட்டர் பாலைவிட அதிகமான விலைக்கு விக்கும்.


புது பேண்ட் 300 ரூபான்னா, அங்கங்க கிழிச்சு விக்கற ஜீன்ஸ் பேண்ட் 1000 ரூபா.


இங்கிலிஷ் பேசத் தெரிந்தா அறிவுஜீவி, இந்தி பேசத் தெரிந்தா தமிழ் துரோகி.


100 ரூபா லஞ்சம் வாங்கினா புழல், 100 கோடி ஊழல் பண்ணா குஜால்.


மின்சாரத் தடையை அதிகாரி அறிவிப்பார். தடை நீக்கத்தை அமைச்சர் அறிவிப்பார்.


உடலும் மனமும் ஒத்துழைக்காதுன்னு பியூனுக்குக் கூட 60 வயசுல பணி ஓய்வு கொடுத்துடுவாங்க. 60 வயசுக்கு மேல இருக்கறவங்க அமைச்சரா நம்மை ஆளுவாங்க.


இந்திய கிரிக்கட் டீம், சர்வதேச போட்டிகளில் நாயடி வாங்கி டப்பா கிழிஞ்சாலும் அடுத்த ஐ.பி.எல் வந்தா சாமி கும்பிட்டு டீவி முன்னாடி சரண்டர் ஆகிடுவாங்க


தெருக்குழாய் உடஞ்சிருந்தா 100 ரூபாய் செலவு பண்ணி பஞ்சாயத்து தலைவரையோ, கார்பரேஷனையோ திட்டி கம்ப்ளெய்ட் பண்ணுவாங்க. இன்டர்நெட்டுக்குப் போய் பிளாக் எழுதுவாங்க. 40 ரூபாய் செலவு செஞ்சு அதை சரிபண்ணயிருக்க மாட்டாங்க.


டீக்கடை பேப்பரில் குழந்தை தொழிலாளர் பற்றி படித்து, “குழந்தை தொழிலாளர்களை வேலை வாங்குபவர்களை நடுத்தெருவில் உதைக்கவேண்டும்” என்று பேசிக்கொண்டே “டேய் சின்னப்பையா, ரெண்டு டீ கொடுடா” ன்னு ஆர்டர் செய்வாங்க.










இதுதான் இந்தியா...

நமது தேசத்தின் சில அவலங்கள்!







1.அத்தியாவசிய தேவையான அரிசியின்                         
விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய்.
ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.





2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.


3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!







5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!






6.நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.


7.நாம் குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது...











8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.








9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.


கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!






10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலாமவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!










11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!

















இந்த நிலை மாறுவது எப்போது?

தூங்கும் பாரதமாதவைத்தான் தட்டி எழுப்பிக் கேட்க வேண்டும்!





























கார்த்தியுடன் போட்டி போடும் அஜித்

                      அஜித் vs கார்த்தி




                             

டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்று ரிலீசிற்காக காத்திருக்கிறது. இப்படத்தை பற்றிய பல்வேறு தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன. அதே சமயம், அஜித் தனது அடுத்த படமான மங்காத்தா சூட்டிங்கில் தீவிரமாக உள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படம் முழுவதும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.


நான் மகான் அல்ல படத்தின் வேலைகள் அனைத்து முடிவடைந்து, ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிட தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அஜித்தின் மங்‌காத்தா படமும் ஆகஸ்ட் 20ம் தேதியன்று வெளியிடுவதற்காக ஜெட் வேகத்தில் தயாராகி வருகிறது. நான் மகான் அல்ல ரிலீசை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு தற்போது மங்காத்தா படமும் அதே நாளில் ரிலீசாக இருப்பதால் இரட்டை ஜாக்பாட் சந்தோஷம் தான்.

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG